ட்விட்டர் ஆபிசுக்கு கையில் பாத்ரூம் சிங்க்குடன் போன எலான் மஸ்க்.. காரணத்தை கேட்டா.. ஆடிப்போய்டுவீங்க
நியூயார்க்: ட்விட்டர் தலைமையகத்திற்கு இன்று எலான் மஸ்க் வருகை புரிந்தார். அவர் தனது கையில் பாத்ரூம் சிங்க் ஒன்றை கொண்டு வந்தது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி உள்ளார். 44 பில்லியன் டாலருக்கு அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி உள்ளார்.
இதன் முழுமையான டீலிங் நாளை நடக்க உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக கைமாற்றுவதற்கான கையெழுத்து நாளை போடப்பட உள்ளது.

ட்விட்டர்
இந்த நிலையில்தான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எலான் மஸ்க் இன்று சென்றார். இது தொடர்பாக நேற்றே அவர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். நான் ட்விட்டர் அலுவலகம் செல்ல போகிறேன். அங்கே பணியாற்றும் ஊழியர்களை பார்க்க போகிறேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படியே இன்று சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ட்விட்டர் அலுவலகத்திற்கு எலான் மஸ்க் சென்றார். அவருக்கு அங்கே அமைதியான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

எலான் மஸ்க்
உள்ளே ட்விட்டர் நிர்வாகிகள் பலருடன் மஸ்க் சந்திப்பு நடத்தினார். நான் நிறைய நல்ல மனிதர்களை சந்தித்தேன் என்று தனது முதல் நாள் விசிட்டிங் பற்றி வார் குறிப்பிட்டார். ட்விட்டர் அலுவலகத்திற்கு சென்ற மஸ்க் கையில் ஒரு பாத்ரூம் சிங்க்குடன் சென்றார். பாத்ரூமில் கை கழுவும் சிங்க் ஒன்றை அவர் கொண்டு சென்றார். அவர் இப்படி செய்தது அங்கு இருந்த ஊழியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

பாத்ரூம் சிங்க்
முதல்முறை இப்படி அலுவலகம் வருகிறார். ஏன் கையில் பாத் ரூம் சிங்கை கொண்டு வருகிறார் என்று நிர்வாகிகள் குழம்பினார்கள். பொதுவாக ஆங்கிலத்தில் let that sink in என்று சொல்வார்கள். அந்த செய்தியில் மூழ்கி போய் விடுங்கள் என்று பொருள்படும் வகையில் let that sink in என்று கூறுவார்கள். இதை குறிப்பிடும் வகையில்தான் எலான் மஸ்க் சிங்க்கை கொண்டு சென்றுள்ளார். அதாவது நான் ட்விட்டர் அலுவலகம் செல்லும் செய்தியில் மூழ்கிடுங்கள் என்று கூறும் வகையில் மஸ்க் போஸ்ட் செய்துள்ளார்.

பயோ
முன்னதாக மஸ்க் தனது ட்விட்டர் பயோவில் "Chief Twit" என்று மாற்றிவிட்டார். அதாவது நான்தான் இந்த நிறுவனத்தின் தலைவர் என்பதை உணர்த்தும் விதமாக அந்த மாற்றத்தை மஸ்க் செய்து இருந்தார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது ஒரு பக்கம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது போலவே சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, இவர் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் பலரை வேலையில் இருந்து தூக்க போவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் மஸ்க் வருகையை எதிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications