இது என்ன இப்படி இருக்கே? மீனா இது? மீனவர் பிடித்த விசித்திர மீன்.. குழம்பி போன நெட்டிசன்கள்!
நியூயார்க்: அமெரிக்காவில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது வலையில் ஓநாய் மீன் ஒன்று சிக்கியுள்ளது. பின்னர் இந்த மீனுக்கு உண்பதற்கு இறால் ஒன்றை கொடுத்து அதை மீண்டும் கடலிலேயே மீனவர் விட்டுள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறதுகிறது.
ஆப்ரிக்க நதிகளில் எப்படி பிரானா மீன்கள் மிக ஆபத்தானவையோ அதேபோல அமெரிக்காவையொட்டியுள்ள கடல் பரப்புக்களில் இந்த ஓநாய் மீன்கள் மிக ஆபத்தானவை. அட்லாண்டிக் கேட்ஃபிஷ், ஓஷன் கேட்ஃபிஷ் மற்றும் டெவில் மீன் என்றும் இது அழைக்கப்படுகிறது.

மீன்
இந்த மீன்கள் பொதுவாக பச்சை நண்டை உண்டு வாழ்கின்றன. சொல்லப்போனால் இந்த ஓநாய் மீன்கள் கடல் நண்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது என்று சொல்லலாம். மட்டுமல்லாது கடலை தூய்மையாக வைத்திருப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது. அசுத்தமான நீரில் இவற்றால் வழ முடியாது. பொதுவாக இது பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.

தோற்றம்
இதன் பற்கள் ஏறத்தாழ ஒரு ஓநாயை போன்றே உள்ளாதல் இதற்கு ஓநாய் மீன் என பெயர் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 1-5 மீ நீளம் வரை வளரும் இந்த வகை மீன்கள் சுமார் 18 கி.கி வரை வளரும். இது கடலின் மிகச்சிறந்த வேட்டையாடியாகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மீன் அட்லான்டிக் கடலில் மீனவர் நோல்ஸ் என்பவரது வலையில் சிக்கியுள்ளது. மற்ற மீன்களுடன் இது வலையில் சிக்கியுள்ளது.

சிக்கியது
பின்னர் இதை மட்டும் தனியே எடுத்த நோல்ஸ் கையில் பிடித்து வீடியோவாக எடுத்து அதை இன்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மிகவும் ஆக்ரோஷமான நிலையில் இருந்த ஓநாய் மீன் நொல்ஸை கடிக்க முயன்றுள்ளது. ஆனால் மீனை அவர் லாவகமாக பிடித்துள்ளார்.வாயில் எதாவது சிக்குமா என தேடிக்கொண்டிருந்த அந்த மீனுக்கு இறாலை கொடுக்கிறார் நோல்ஸ். இறாலை ஓநாய் மீன் ஆக்ரோஷமாக கடித்த பின்னர் மீனை கடலிலேயே வீசி எறிந்துள்ளார் அவர்.

எப்படி வசிக்கும்?
நவீன மீன்பிடி தொழில் முறைகளாலும், அதீத தேவைகளாலும் இந்த வகை மீன்கள் மிக வேகமாக குறைந்து வருகின்றன. பொதுவாக 500 மீட்டர் ஆழத்தில் வசிக்கும் இந்த வகை மீன்கள் கடும் குளிரையும் தாங்கும் இயல்பு கொண்டவையாகும். இந்த ஆழத்தில் -1 டிகிரி அளவுதான் வெப்பம் இருக்கும். ஆனாலும் இது அப்பகுதியில் சுறுசுறுப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications