எங்க போனாலும் ஃபாலோ பண்றான்.. 19 வயது இளைஞரால் விக்கித்து போன எலான் மஸ்க்.. எடுத்த பரபர முடிவு!
நியூயார்க்: 19 வயதே நிரம்பிய இளைஞர் ஒருவரை ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சமூக வலைத்தளங்களில் பிளாக் செய்துள்ளார். இந்த சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.. எலான் மஸ்க் ஏன் இப்படி செய்தார் என்பதே இதில் சுவாரசியம்!
19 வயது அண்ட் இளைஞர் விளையாட்டாக தொடங்கிய விஷயம்.. எலான் மஸ்க்கின் பாதுகாப்பிற்கே சிக்கலாக மாறியுள்ளது. உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர். முக்கியமாக ட்விட்டரில் மிகவும் தீவிரமாக செயல்பட கூடியவர்.
ட்விட்டரில் இவர் மற்றவர்களை கிண்டல் செய்துதான் பார்த்து இருப்போம்.. ஆனால் அதே ட்விட்டரில் 19 வயதே நிரம்பிய ஸ்வீனே என்ற இளைஞர் எலான் மஸ்க்கை திணற வைத்துள்ளார். ஸ்வீனே புளோரிடாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அங்கு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் இவர்.

"Elon Musk's Jet
கடந்த 2020ல் இவர் "Elon Musk's Jet" என்ற பக்கத்தை உருவாக்கினார். இதன் நோக்கம் மஸ்க் செல்லும் விமானத்தை டிராக் செய்வது. அதாவது மஸ்க் செல்லும் பிரைவேட் ஜெட் விமானம் எங்கெல்லாம் செல்கிறது என்று ரியல் டைமில் சொல்லும் தளம் ஆகும் இது. விளையாட்டிற்கு இவர் தொடங்கிய இந்த பக்கம் பெரிய நிறுவனங்கள் இடையே கவனம் பெற்றது. இதை வைத்து ஸ்வீனே கொஞ்சம் கொஞ்சமாக பணம் சம்பாதிக்க தொடங்கினார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்கின் பயண விவரங்களை, பிஸ்னஸ் திட்டங்களை தெரிந்து கொள்ள விரும்பிய பெரு நிறுவனங்கள், போட்டி அமைப்புகள், இவரின் அப்பாயின்ட்மென்ட் பெற விரும்பும் நபர்கள் பலர் ஸ்வீனேவை அணுகி எலான் மஸ்க் எங்கே இருக்கிறார் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை சென்றது. எலான் இருக்கும் இடத்தை தெரிவித்து அதற்கு குறிப்பிட்ட தொகையை ஸ்வீனே வாங்கி வந்தார். இது தற்போது பிஸ்னஸ் மாடலாக உருவெடுத்துள்ளது.

உரிமை மீறல்
ஆனால் அதே சமயம் இது தனிப்பட்ட உரிமை மீதான அத்துமீறல் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது தனிப்பட்ட வகையில் எலான் மஸ்க்கின் பாதுகாப்பிற்கு இது ஆபத்தாக முடியும். உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான். அவர் ஜெட் எங்கே இருக்கிறது, எங்கே பறக்கிறது என்று ரியல் டைமில் கண்டுபிடிப்பது மிக மிக தவறான விஷயம். இது சட்டப்படியும் தவறு. அதேபோல் பாதுகாப்பு ரீதியாகவும் மிகவும் தவறான விஷயம்.

ஜெட் எங்கே இருக்கிறது,
இந்த தளம் பிரபலம் ஆன நிலையில் ஸ்வீனேவை எலான் கடந்த நவம்பரில் நேரடியாக தொடர்புகொண்டார் . உங்கள் பக்கத்தை நிரந்தரமாக மூடுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ஸ்வீனேவிடம் 5000 டாலர் தருவதாகவும் கூறி இருக்கிறார். ஆனால் ஸ்வீனேவோ எனக்கு 50 ஆயிரம் டாலர் வேண்டும். கல்லூரி பீஸ் கட்ட வேண்டும். இல்லையென்றால் டெஸ்லாவின் புதிய மாடல் 3 கார் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

50 ஆயிரம் டாலர் வேண்டும்
ஆனால் இதை எலான் மஸ்க் ஏற்கவில்லை. இது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஸ்வீனேவை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பிளாக் செய்துள்ளார். உன்னால் என்னுடைய பாதுகாப்பிற்கு சிக்கல்.. நீ செய்வது தவறு என்று ஸ்வீனேவிடம் எலான் மஸ்க் புலம்பியதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த பக்கத்தை மூடும் திட்டம் இல்லை என்பதில் ஸ்வீனே உறுதியாக இருக்கிறார்.

Ground Control
அதோடு இவரை பல நிறுவனங்கள் அணுகுவதாகவும். வேறு கோடீஸ்வரர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்பதாகவும் ஸ்வீனே கூறியுள்ளார். இதற்காக Ground Control என்ற பக்கத்தை தொடங்கும் திட்டத்தில் இவர் இருக்கிறார். அதில் சுந்தர் பிச்சை, பில்கேட்ஸ், ஜெப் பெஸோஸ் போன்ற கோடீஸ்வரர்கள், பிரபல சிஇஓக்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்களின் ஜெட் எங்கே இருக்கிறது உள்ளிட்ட பயண விவரங்களை வெளியிட ஸ்வீனே திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications