இந்தியர்கள் இனி அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது ரொம்ப கஷ்டம்! வருந்தும் பல கோடி பேர்! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை நீக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல கோடி பேர் அங்கே குடியுரிமை பெறாமல் போக வாய்ப்பு உள்ளது. முக்கியமாக இந்தியர்கள் பலர் இதனால் நேரடியாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் உள்ளனர். இதில் கிரீன் கார்டு பெற்றவர்கள் நிரந்தர குடிமக்கள். இவர்கள் நேரடி சிட்டிசன் இல்லை என்றாலும் நிரந்தரமாக அங்கே இருக்க தகுதி பெற்றவர்கள். இவர்களுக்கு பிரச்சனை இல்லை. சரி வேறு விசா எடுத்துக்கொள்வோம். உதாரணமாக H1 B விசா எடுத்துக்கொள்வோம்.

donald trump inauguration donald trump

இதை வைத்து இருப்பவர்கள் பொதுவாக கிரீன் கார்டு பெற விண்ணப்பிப்பார்கள். இப்போது கிரீன் கார்டு பெற வேண்டும் என்றால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். கிரீன் கார்டுக்கான காத்திருப்பு நேரம் கிரீன் கார்டின் வகை மற்றும் விண்ணப்பதாரரின் பின்னணியை பொறுத்து மாறுபடும்.

உதாரணமாக ஒரு நபர் கிரீன் கார்டு விண்ணப்பிக்கிறார் என்றால்.. அவரின் வாழ்க்கை துணைவர் அல்லது உடனடி உறவினர் அமெரிக்க குடிமகனாக இருந்தால்.. காத்திருக்கும் நேரம் தற்போது 9.8 மாதங்கள் ஆகும்.

யு.எஸ். கிரீன் கார்டு வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தால்: அவர்களுக்கு காத்திருப்பு நேரம் அதிகமாக இருக்கலாம், பொதுவாக இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.

ஆனால் இப்படி உறவினர் யாரும் இல்லை.. வெறுமனே வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகள் பெற வேண்டும் என்றால்: காத்திருப்பு நேரம் மிக அதிகமாக இருக்கும். பொதுவாக இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். சிலருக்கு 10வருடம் கூட ஆகலாம்.

21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத குழந்தைகள்: 14.3 மாதங்கள் ஆகும்.

அமெரிக்க குடிமக்களின் வயது வந்த குழந்தைகள்: காத்திருப்பு நேரம் 7-8 ஆண்டுகள் இருக்கலாம்.

அரசியல் தஞ்சம் பெற்றவர்களுக்கு கிரீன் கார்டு: 1 வருடத்திற்குள் வழங்கப்படலாம்.

அசாதாரண திறன் கொண்ட நபர்களுக்கு கிரீன் கார்டு: காத்திருப்பு நேரம் 1 முதல் 2 ஆண்டுகள் ஆகும்.

பொதுவாக இந்தியர்களில் ஒருவருக்கு கிரீன் கார்டு இருந்து அவர்களின் வாழ்க்கை துணைக்கு கிரீன் கார்டு இல்லை என்றால் கூட சிக்கல் இல்லை. இருவருக்கும் கிரீன் கார்டு இல்லை என்றால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை அங்கே குடிமகனாக ஆக முடியாது. சிலர் கிரீன் கார்டு பெற 10- 15 வருடங்கள் வரை லைனில் காத்திருக்கிறார்கள் என்பதால் அவர்கள் ஒன்று குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது. அல்லது குழந்தை பெற்றால்.. அந்த குழந்தை 18 வயதுக்கு பின் தனக்கு தனியாக கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும். இதனால் இந்தியர்கள் அங்கே குடியுரிமை பெறுவது சிக்கலாகி உள்ளது.

மாற்றம் என்ன?:

பொதுவாக ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அது அந்த நாட்டு குடிமகனாக மாறும். அதாவது ஆட்டோமேட்டிக் குடியுரிமை என்று இதை அழைப்பார்கள். உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த முறை உள்ளது. ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அதன் தாய் - தந்தை அந்த நாட்டு குடிமகனாக இல்லை என்றாலும் என்றாலும் அந்த குழந்தை அந்த நாட்டு குடிமகனாக மாறும். அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தைதான் டிரம்ப் நீக்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடைப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார். அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த முதல் நாளே அதை நடைமுறை படுத்தி உள்ளார்.

இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது பெற்றோர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.

இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று டிரம்ப் மிக முக்கியமான முடிவை எடுக்க உள்ளார். இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+