ஒரே ஒரு போன்கால்தான்.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்ட டிரம்ப்.. ரஷ்யாவுடன் கைகோர்த்த நொடி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர். டிரம்ப் இதோடு நிற்காமல்.. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார். டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இந்த அமைதி பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

donald trump vladimir putin ukraine russia war

அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.

சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டுள்ளது.

ஆனால் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க டிரம்ப் விரும்பவில்லை. அவர் ரஷ்யாவுடன் நெருக்கமாகி வருகிறார். தேவையின்றி இந்த போரில் செலவு செய்யவும் டிரம்ப் விரும்பவில்லை.

இதையடுத்தே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர்.

புடின் உடன் இதையதே டிரம்ப் சந்திப்பு நடத்த உள்ளார். டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எதையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. முக்கியமாக நேட்டோ நாடுகள் யாரையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளன.

சமாதானப் பேச்சுவார்த்தையில் தங்களை சேர்த்துக்கொள்ளாததை அடுத்த ஐரோப்பிய தலைவர்கள் பாரிஸில் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் டிரம்பின் செயல்பாடு பற்றி அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றால் பேச்சுவார்த்தையில் டிரம்ப் கை ஓங்கி இருக்கும்.. புடின் கையும் ஓங்கி இருக்கும்.

டிரம்பிற்கும் உக்ரைனை பெரிதாக பிடிக்காத காரணத்தால்.. உக்ரைனை அழுத்தி.. அந்த நாட்டிற்கு எதிரான முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது. உக்ரைனுக்கு எதிரான கடுமையான முடிவுகளை இதில் எடுக்கலாம்.. உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பதால் ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+