டிரம்ப் படிச்சு படிச்சு சொன்னாரே.. தூக்கி வீசிய இஸ்ரேல்.. ஈரான் அட்டாக்கில் இதை கவனிச்சீங்களா?
நியூயார்க்: ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் இஸ்ரேல் இந்த ஐடியாவை பயன்படுத்தவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்தார் அமெரிக்க முன்னாள் அதிபரும், அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலகைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார்.

ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். ஆனால் டிரம்பின் இந்த ஐடியாவை இஸ்ரேல் கேட்கவில்லை . அவர் திட்டத்தை இஸ்ரேல் கேட்காமல்.. லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் தாக்குதலை மட்டுமே இஸ்ரேல் நடத்தி உள்ளது.
தாக்குதல் நடந்தது எப்படி?: ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.
என்ன சொன்னார்?: முன்னதாக ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து இருந்தார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார். அதன்படியே தற்போது இஸ்ரேல் லேசான தாக்குதலை நடத்தி உள்ளது.
இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது. இஸ்ரேலிய ராணுவம் மூன்று அலை தாக்குதல்களில் நடத்தி உள்ளது. மொத்தமாக 20 இலக்குகளை குண்டுவீசி தாக்கியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள பல ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications