முக்கிய மீட்டிங்கில் காலி இருக்கை! ஜெஃப் பெசோஸின் வித்தியாசமான யோசனை! காரணம் இதுதான்
நியூயார்க்: ஒவ்வொரு பணக்காரர்களுக்கும் வித்தியாசமான சில பழக்கங்கள் இருப்பதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதேபோல அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தான் சிஇஓவாக இருந்த காலத்தில், அவர் தலைமையில் நடந்த எல்லா கூட்டங்களிலும் ஒரு காலி சேரை போட்டு வைத்திருப்பார் என்று அந்நிறுவன ஊழியர்கள் கூறியுள்ளனர். இதற்கான காரணம் தற்போது தெரிய வந்திருக்கிறது.
விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வெற்றிகரமான வணிகர்கள் என பெரிய பிரபலங்கள் பலரும் வித்தியாசமான சில பழக்கவழக்கங்களை கொண்டிருப்பார்கள்.

உதாரணமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் புகழ் பெற்றிருந்தாலும், ரொம்பவும் சிம்பிளான வாழ்க்கையைதான் வாழ்ந்தார். அதுதான் அவருடைய விருப்பமாகவும் இருந்தது. அதேபோல் ஸ்மார்ட்போன் எனும் பெரும் புரட்சியை உருவாக்கிய ஆப்பிள் நிறுவனர் டிம் குக், தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஒரு நாள் கூட இந்த வழக்கத்தை அவர் தவறியதே கிடையாது.
அந்த வரிசையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருக்கும் அமேசானின் ஜெஃப் பெசோஸும் சில வித்தியாசமான பழக்கத்தை பின்பற்றி இருக்கிறார். அதாவது தன்னுடைய தலைமையில் நடக்கும் ஒவ்வொரு முக்கியமான கூட்டத்திலும் காலி சேர் ஒன்றை எப்போதும் போட்டு வைத்திருப்பாராம். இப்படி செய்வது 'காலி சேர்' கோட்பாடு என்று சொல்லப்படுகிறது.
இந்த வித்தியாசமான பழக்கத்திற்கான காரணங்கள் என்ன என்பதை, அவருடன் பணியாற்றியவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது அவர் உருவாக்கிய அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை ஏற்றி செல்கிறது. இந்த பணியில் வேறு எந்த டெலிவரி நிறுவனமும் எட்டாத உயரத்தை அமேசான் எட்டியுள்ளது. அதை இன்றுவரை தக்கவைத்தும் வருகிறது. எனவே இதனை மேலும் வளர்த்தெடுக்க பெசோஸ் ஒவ்வொரு நாளும் யோசித்து வந்திருக்கிறார்.
அவர் இந்நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த நாட்களில், வாடிக்கையாளர்களின் கருத்துகளை தெரிந்துக்கொள்ள மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பாராம். ஏனெனில் தேவைதான் உற்பத்தியை தீர்மானிக்கும். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை தெரிந்துக்கொள்ளவும், அவர்களுடைய கோணத்திலிருந்து யோசிக்கவும் இவர் நடத்தும் கூட்டங்களில் காலி இருக்கை ஒன்று போடப்படும். அந்த இருக்கையின் வழியாக பார்க்கும்போதுதான் பல முக்கிய மாற்றங்களுக்கான ஐடியாக்கள் பிறக்கும் என்பது பெசோஸின் நம்பிக்கை.
இந்த காலி இருக்கை யோசனை 1950களில்தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கியமான கூட்டங்களில் ஒருவர் வராவிடில், அவர் தரப்பிலிருந்து என்ன கருத்து வெளியாகியிருக்கும் என்கிற யோசனையை இந்த காலி சேர் மூலம் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். கற்பனைதானே புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படை! எனவே இந்த 'காலி சேர்' கோட்பாட்டை பல வணிக முதலாளிகளும் கடைபிடித்தனர். எதிர்பார்த்த அளவுக்கு இது அவர்களுக்கு வெற்றியையும் கொடுத்திருக்கிறது. ஜெஃப் பெசோஸும் இதை கடைபிடித்திருக்கிறார்.
இப்போது நீங்கள் சொல்லுங்கள்.. ஏதாவது முக்கியமான முடிவை எடுக்கும்போது, மற்றவர்கள் கோணத்திலிருந்து எப்போதாவது யோசித்தது உண்டா?












Click it and Unblock the Notifications