இதென்ன செவ்வாய் கிரகத்தில்.. கருப்பா எதோ போயிட்டு வருதே.. நாசா வீடியோ! அப்படியே ஆடிப்போன நெட்டிசன்ஸ்
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் இருந்து வீடியோ ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கருப்பு நிற உருவம் ஒன்று சூரியன் அருகே நகர்ந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
Recommended Video
செவ்வாய் கிரகத்தின் நிலவுகளில் ஒன்று ஃபோபோஸ் . பல இடங்களில் சிறு சிறு குழிகளாக, நெளிந்து போன உருளைக்கிழங்கு போல இது தோற்றம் கொண்டு இருக்கும்.
ஒரு காலத்தில் உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட நிலவுகளில் இது ஒன்று. இப்போதும் இதில் உயிரினம் இருக்கிறதா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

எப்படி இருக்கும்?
சூரிய குடும்பத்தில் கிரகம் ஒன்றை மிக குறைந்த தொலைவில் சுற்றும் நிலவு ஃபோபோஸ்தான். 27 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஃபோபோஸ் நிலவு. இது செவ்வாய் கிரகத்தை 6000 கிமீ தூரத்தில் சுற்றி வருகிறது. செவ்வாய் கிரகத்தை சுற்றும் இன்னொரு நிலவான டெயிமோசை விட இது அளவில் பெரியது. டெயிமோஸ், ஃபோபோஸ் என்பது கிரேக்க புராணத்தில் வரும் போர் கடவுளான ஏர்சின் இரட்டை புதல்வர்களின் பெயர். இந்த இரண்டு பெயரின் அர்த்தமும் பயம் என்பதாகும்.

என்ன?
இந்த நிலையில்தான் செவ்வாய் கிரகத்தின் வீடியோ ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கருப்பு நிற உருவம் ஒன்று நகர்ந்து சூரியன் அருகே செல்வது வைரலாகி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நாசாவின் மார்ஸ் பிரெசெவரென்ஸ் மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சூரியனை பார்த்து மார்ஸ் பிரெசெவரென்ஸ் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளது. சூரியனின் நடுவில் கருப்பு நிறத்தில் மெதுவாக ஒன்று நகர்வது போல காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

விளக்கம்
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு தற்போது நாசா விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பூமியில் ஏற்படுவது போல அங்கு சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. அதாவது செவ்வாய் கிரகத்திற்கும், சூரியனுக்கும் இடையில் அங்கு இந்த ஃபோபோஸ் குட்டி பையன் வந்து உள்ளது. இதனால் அங்கு சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. இதுதான் சூரியன் அருகே கருப்பு நிறத்தில் எதோ செல்வது போல செவ்வாய் கிரகத்தில் தோன்றி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நாசாவின் மார்ஸ் பிரெசெவரென்ஸ் மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

ஹிட்
நமக்கு சூரிய கிரகணம் ஏற்படும் போது இடையில் நிலவு செல்லும். ஆனால் நம்முடைய நிலவு பெரியதாக, வட்டமாக இருக்கும். இதனால் கிரகணம் ஏற்படும் போது பார்க்க அழகாக இருக்கும். ஆனால் செவ்வாய் கிரகத்தின் ஃபோபோஸ் நிலவு வட்டமான வடிவத்தில் இல்லை. இதனால் சூரியன் இடையே அது வரும் போது பார்க்க கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. நாசாவின் மார்ஸ் பிரெசெவரென்ஸ் ரோவேரில் உள்ள Mastcam-Z மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. Video credit NASA

நாசா
ஃபோபோஸ் பல ஆச்சர்யங்களை சுமந்து நிற்க கூடிய நிலவு. ஃபோபோஸ் நிலவு முழுக்க பல இடங்களில் சிறு சிறு குழிகள் உள்ளது. அங்கு நிலவும் வானிலை, தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை சுற்றுவது, செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசை ஆகியவைதான் இந்த குழிக்கு காரணம் ஆகும். இந்த ஃபோபோஸ் நிலவில் ஒரு பக்கம் பெரிய குழி காணப்படுகிறது. இது 9 கிமீ கொண்ட குழி ஆகும். இதனால்தான் இந்த ஃபோபோஸ் உருளைக்கிழங்கு போல காட்சி அளிக்கிறது. Video credit
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications