அது என்ன? பல பில்லியன் கிமீ தொலைவில்.. வானத்தில் மிளிரிய சிவப்பு பட்டாம் பூச்சி! திகைக்க வைத்த நாசா
நியூயார்க்: நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இந்த உலகம் குறித்து நாம் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது என்பதை இந்த ஒற்றை புகைப்படம் உணர்த்தி உள்ளது.
Recommended Video
நாசா தனது வலிமையான தொலைநோக்கிகள், ஸ்பேஸ் ஆர்பிட்டர்கள், பல்வேறு விண்கலன்கள் மூலம் சுவாரசியமான விண்வெளி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். பொதுவாக நாசா இது போல வெளியிடும் படங்கள் வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கும்.
கிரகங்களின் புகைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு விண்வெளி நட்சத்திர கூட்டம்.. கேலஸ்கிகள் ஆகியவற்றின் புகைப்படங்களை கூட நாசா வெளியிடுவது வழக்கம்.

நாசா
முக்கியமாக நாசா வெளியிடும் நட்சத்திர கூட்டங்களின் புகைப்படங்கள் வெகுவாக கவனம் ஈர்க்கும். அதேபோல் நெபுலாக்களின் புகைப்படங்களையும் நாசா வெளியிடுவது வழக்கம். நெபுலா என்பது வானத்தில் இருக்கும் வாயுக்கள், துகள்களின் கூட்டம் ஆகும். பல மில்லியன், பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு தொலைவில் இது போன்ற வாயு, தூசி கூட்டங்கள் காணப்படும்.

போட்டோ
பல்வேறு வாயுக்கள், வித விதமான தூசுகள் இருப்பதால் இந்த கூட்டங்கள் பொதுவாக பார்க்கவே வித்தியாசமான தோற்றத்தில், பல்வேறு வண்ணங்களில் இருக்கும். அந்த வகையில்தான் நாசா தற்போது நெபுலா ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நாசாவின் Spitzer Space Telescope எனப்படும் தொலைநோக்கி மூலம் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தூசுகள்
இந்த புகைப்படத்தில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்டால்.. அந்த நெபுலா பார்க்க அப்படியே பட்டாம்பூச்சி போலவே இருப்பதுதான் சிறப்பு. ஆம் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த நெபுலா.. பெரிய பட்டாம்பூச்சி ஒன்று சிறகு விரித்து பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் பறப்பது போல காட்சி அளிக்கிறது. இந்த சிறகுகள் போன்ற தோற்றம் கொண்டவை.. வாயுக்கள் மற்றும் தூசுகள் கூட்டம் ஆகும்.

நெபுலா
அதோடு இவை மிகுந்த அதிக வெப்பநிலையில் இருக்கின்றன. இங்கு பெரிய நட்சத்திரம் ஒன்று உருவாக போகிறது. பொதுவாக இது போன்ற நெபுலாக்களில்தான் நட்சத்திரம் உருவாகும். உள்ளே இருக்கும் வாயு மற்றும் தூசுகள் காரணமாக நட்சத்திரங்கள் உருவாகும். அதாவது வாயுக்கள், தூசுகள் ஒன்றுடன் ஒன்று மோதும். இது அதிக வெப்பநிலையை வெளிப்படுத்தும். இது உள்ளேயே பல கெமிக்கல் விளைவுகளை ஏற்படுத்தும்.

தூசுகள்
இதன் காரணமாக தூசுகள் இணைந்து ஒரு கோர் போன்ற மைய பகுதியை உருவாக்கும். அங்கு நிலவும் வெப்பநிலை இதை எரிய வைத்து நட்சத்திரங்கள் உருவாகும். இந்த நெபுலாவும் பெரிய நட்சத்திரம் ஒன்றை உருவாக்க போகிறது. அது கண்டிப்பாக அதிக வெப்பநிலையில் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. நாசா வெளியிட்ட இந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications