டிரம்ப் எடுக்கும் ஒற்றை முடிவு.. இனி தங்கம் விலை சர்ரென உயரப்போகிறது.. வாங்க வாங்க லாபம்தான்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் வட்டி விகிதங்களை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று மத்திய வங்கிக்கு உத்தரவிட உள்ளார். விரைவில் அங்கே வட்டி குறையும். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும்.
பொதுவாக அதிக வட்டி விகிதங்கள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும், உள்நாட்டு நாட்டின் நாணயத்தின் தேவை மற்றும் மதிப்பை அதிகரிக்கும். மாறாக, குறைந்த வட்டி விகிதங்கள் வெளிநாட்டு முதலீட்டிற்கு கவர்ச்சியற்றவை மற்றும் நாணயத்தின் மதிப்பைக் குறைக்கின்றன. இப்படி டாலர் நாணயத்தின் மதிப்பு குறைந்தால் இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

தங்கம் விலை உயரும்:
தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200-க்கு விற்பனை ஆகிறது. சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 7,526 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 8,210 (1 கிராம்) ஆகவும் உள்ளது.
இப்படி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் தங்கத்தை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்று அதிபராக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் நேற்று தங்கத்தின் விலை புதிய உச்சம் அடைந்தது.
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்று உள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் தங்கம் விலை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் .. அமெரிக்க வங்கிகள் வட்டி மதிப்பை குறைத்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592.39 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை $2,598.60 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்கள் இப்போது ஃபெட் தலைவர் ஜெரோம் பவலின் கருத்துகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைத்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும், என்பது குறிப்பிடத்தக்கது. இதை டிரம்ப் ஊக்குவிக்கிறார். இதனால் தங்கம் விலை உயரும்.
இந்தியாவில் தங்கத்தின் விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பைப் பொறுத்தது. சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரின் விலை சரியும் போதெல்லாம் உயரும். அதேபோல் அமெரிக்க டாலர் மதிப்பில் உயர்வு ஏற்பட்டால், தங்கத்தின் மதிப்பு குறையும்.
சிறிய சிறிய இறக்கங்கள் அவ்வப்போது இருந்தாலும்.. 2024ம் ஆண்டு முழுக்கவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை வரும் நாட்களும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும்.
2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications