45 நிமிடம் உயிர் இல்லை.. மார்ச்சுவரி வரை சென்ற பெண்.. திடீரென எழுந்து பேசியதால் பரபரப்பு.. ஷாக்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில் 45 நிமிடம் கழித்து மீண்டும் உயிர்பெற்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுக்க மருத்துவமனைகளில் பல வினோத சம்பவங்கள் நடப்பது வழக்கம். பலர் சாவின் விளிம்பு வரை சென்றுவிட்டு மீண்டும் உயிரோடு திரும்பிய சம்பவங்கள் கூட நடந்து இருக்கின்றன. குணப்படுத்த முடியாத மோசமான நோய்களில் இருந்து விடுபட்டவர்கள் கூட இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் கூட மருத்துவமனைகளில் பல வினோத சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. நல்ல ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள் ஒரு நொடியில் மரணிப்பதும், மோசமான உடல்நிலையில் இருப்பவர்கள் திடீரென எழுந்து உற்சாகமாக நடக்கும் அளவிற்கு ஆரோக்கியமாக மாறுவதும் பல முறை நடந்து இருக்கின்றது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இப்படித்தான் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மெரிலேண்ட் பகுதியை சேர்ந்தவர் காதி பாட்டன். இவரின் மகள் ஸ்டேசி பைபர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் ஸ்டேசியை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவருக்கு உடனே பிரசவம் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அம்மா

அம்மா

இந்த சம்பவம் நடந்த போது அந்த பெண்ணின் தாயார் காதி பாட்டன் தனது சொந்த கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது சரியாக இவருக்கு மகளின் பிரசவம் குறித்த செய்தி சென்று இருக்கிறது. இதையடுத்து உடனடியாக காரை எடுத்துக்கொண்டு காதி பாட்டன் மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். இதயம் முழுக்க படபடப்போடு வேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார்.

ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

மருத்துவமனைக்கு படபடப்போடு சென்ற காதி பாட்டனுக்கு திடீரென மருத்துவமனைக்கு உள்ளே சென்றதும் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதில் அங்கேயே காதி பாட்டன் சுருண்டு விழுந்து இருக்கிறார். அவருக்கு உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டது. ஆரம்ப கட்ட சிகிச்சைகள் பலன் அளிக்காத நிலையில் அவரை அவசர வார்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சிபிஆர்

சிபிஆர்

சிபிஆர் சிகிச்சை அதன்பின் ஆக்சிஜன் சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவ்வளவு சிகிச்சைக்கு பின்பும் அந்த பெண்ணின் இதயம் துடிக்கவில்லை. அந்த பெண்ணின் நாடி மீண்டும் வரவே இல்லை. அதேபோல் ரத்த அழுத்தமும் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறவில்லை. 45 நிமிடமாக அவர் இப்படியே இருந்துள்ளார். உடலில் எந்த இயக்கமும் இல்லாமல் இருந்திருக்கிறார். இதன் அர்த்தம் அவரின் மூளைக்கும் சரியாக ரத்தம் செல்லவில்லை என்பதாகும்.

மரணம்

மரணம்

இதனால் அவர் மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை மார்ச்சுவரி கொண்டு செல்லும் பணிகள் நடந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் அவரின் மகள் ஸ்டேசிக்கு சுகப்பிரசவம் செய்ய முடியாது சி செக்சன் மருத்துவம்தான் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் குழந்தை பிறந்தது.

மீண்டு வந்தார்

மீண்டு வந்தார்

இங்கு குழந்தை பிறந்த அதே நொடியில் காதி பாட்டனின் உடல்கூறு நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் உடல்கூறு செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சரியாக அவருக்கு உயிர் திரும்பியது. திடீரென உயிர் பெற்ற காதி பாட்டன் படுக்கையில் இருந்தபடியே உளறி இருக்கிறார். லேசாக இவர் முணுமுணுத்து நிலையில் உடனடியாக அவசர வார்டுக்கு கொண்டு சென்று ஆக்சிஜன் கொடுத்துள்ளனர். அவர் உயிரோடு இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. காதி பாட்டன் எப்படி உயிரோடு திரும்பி வந்தார் என்று தெரியவில்லை என்று அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் டோவ் பிராங்கல் தெரிவித்துள்ளார். சரியாக இங்கே குழந்தை பிறக்கும் நேரத்தில் அங்கே காதி பாட்டன் உயிர் பிழைத்து உள்ளார். இதெல்லாம் மிகப்பெரிய அதிசயம். இது எப்படி நடந்தது என்று என்னால் மருத்துவ ரீதியாக விளக்க முடியவில்லை என்று அந்த டாக்டர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+