சிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. லயன் கிங் முன்னாடி போய் டான்ஸ் போட்ட பெண்!

சிங்கம் முன்பு பெண் ஒருவர் டான்ஸ் ஆடி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இவர்தான் ஒரிஜினல் "சிங்கப் பெண்ணே".. நல்ல வேளை அந்த சிங்கம் வயிறு நிறைய சாப்பாடு சாப்பிட்டு விட்டு டயர்டாக இருந்ததால் இவர் தப்பினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் விலங்கியல் காப்பகத்தில்தான் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள விலங்கியல் காப்பகத்தில் சிங்கம் உள்ளது.

Woman climbs into New York zoo exhibit and dances in front of lion

இந்த சிங்கத்தைப் பார்க்க பெரும் கூட்டம் வரும். அப்படி வந்தவர்களில் ஒரு பெண் திடீரென உள்ளுக்குள் குதித்து விட்டார். அந்த நேரம் பார்த்து ஒரு சிங்கம் நின்று கொண்டிருந்தது. அந்த சிங்கத்தை நெருங்கிய பெண் சிங்கத்தின் முன்பு போய் நின்று கொண்டார்.

சிங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போதுதான் நன்றாக சாப்பிட்டு விட்டு டயர்டாக நடந்து வந்து கொண்டிருந்தது அது. எதுக்காக இந்த பொண்ணு நம்ம முன்னாடி வந்து நிக்குது என்று புரியாமல் அமைதியாக அவரைப் பார்த்தது சிங்கம். சிங்கத்திற்கு முன்னாடி வந்த பெண் ஏதோ சத்தமாக அதை நோக்கிப் பேசினார்.

சிங்கத்துக்கு எதுவும் புரியலை.. கம்முன்னு பார்த்துக் கொண்டே இருந்தது. அந்தப் பெண்ணின் சத்தம் ஓவராக இருந்ததால் பயந்ததா அல்லது வயிறு சரியில்லை.. மறுபடியும் சாப்பிட்டால் ஜெலுசில் குடிக்க நேரிடும் என்று நினைத்து பேசாமல் இருந்ததா என்று தெரியவில்லை. அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தது.

இதற்கிடையே ஒரு பெண் சிங்கத்தை சீண்டிக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்து விலங்கியல் காப்பக ஊழியர்கள் விரைந்து வந்தனர். அப்பெண்ணை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

எது எப்படியோ.. சிங்கப் பெண்ணே பாடலுக்கு இவர்தான் சரி பொருத்தமான பெண்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+