இந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Trump & Imran Khan meet | இம்ரான் கான்-டிரம்ப் சந்திப்பில் நடந்த பரபரப்பு!- வீடியோ

    நியூயார்க்: இந்தியாவிற்கு உலக வர்த்தக அமைப்பு கொடுக்கும் சலுகைகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் குரல் கொடுத்துள்ளார்.

    ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது உலக வர்த்தக அமைப்பு. உலக நாடுகளுக்கு இடையில் நடக்கும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும்பொறுப்பை இந்த WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்புதான் கவனித்து வருகிறது.

    இந்த நிலையில் உலக வர்த்தக அமைப்பிற்கு தற்போது அமெரிக்க அதிபரிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

    ஏன்

    ஏன்

    இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடந்த சில வாரங்களாக வர்த்தக ரீதியாக சண்டை நடந்து வருகிறது. அதேபோல் அமெரிக்கா சீனா மீதும் வர்த்தக ரீதியாக நிறைய புகார்களை வைத்து வருகிறது. அமெரிக்கா வைக்கும் ஒரே புகார் இந்தியா சீனா இரண்டு நாடுகளும் அதிக அளவில் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கிறது என்பதுதான்.

    சீனா எப்படி

    சீனா எப்படி

    அதாவது அமெரிக்கா இந்தியா மற்றும் சீனாவின் பொருட்களுக்கு குறைவாக வரி விதிக்கிறது. ஆனால் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கிறது என்று டிரம்ப் கூறி வருகிறார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவின் மின்னணு சாதனங்களுக்கு மிகப்பெரிய அளவில் அமெரிக்காவில் வரி உயர்த்தப்பட்டது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் பனிப்போர் நடந்து வருகிறது.

    அதிரடி ஏன்

    அதிரடி ஏன்

    இந்த நிலையில் அதிரடி திருப்பமாக இந்தியா மற்றும் சீனாவிற்கு அளிக்கப்படும் வரி சலுகைகளை உலக வர்த்தக அமைப்பு நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. உலக வர்த்தக அமைப்பானது இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளுக்கு வளரும் நாடுகள் என்ற பட்டத்தை கொடுத்துள்ளது. இந்த வளரும் நாடுகள் டேக்கை பெற்ற நாடுகளுக்கு சில சலுகைகள் வழங்கப்படும்.

    இனி கூடாது

    இனி கூடாது

    முக்கியமாக வரி சலுகை, எளிதான வியாபார விதிமுறை, தொழில், முதலீட்டு விதிமுறைகள் எளிதாக இருக்கும். உலக வர்த்தக அமைப்பு இந்தியாவிற்கு இப்படி சலுகை வழங்க கூடாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா, இந்தியா இரண்டும் வளரும் நாடுகள் அல்ல. அவை வளர்ந்த நாடுகள். அவர்களுக்கு இனியும் சலுகை வழங்க கூடாது.

    என்ன பாதிப்பு

    என்ன பாதிப்பு

    இந்தியா, சீனாவால் அமெரிக்கா பாதிக்கப்படுகிறது. இனியும் இந்தியா சீனாவை சலுகைகளை அனுபவிக்க விட மாட்டேன். இந்த சலுகை முறைக்கு விரைவில் சரியான முடிவு கொண்டு வரப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+