ஹேய், அதுல அப்படியென்ன இருக்கு? ஒரு சாக்லேட் ரூ.1 கோடி? இதுக்கு போட்டா போட்டி வேற.. எங்கேனு பாருங்க
நியூயார்க்: ஒரே ஒரு சாக்லேட், உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த சாக்லெட் பற்றின ஆராய்ச்சியைதான் இணையவாசிகள் கையில் எடுத்துள்ளனர்.. இந்த சாக்லெட்டில் அப்படி என்ன சிறப்புகள் உள்ளன தெரியுமா?
அனைவராலும் விரும்பப்பட்டு வரும் இனிப்பு பொருளாக சாக்லேட்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.. எந்த காலத்திலும் சாக்லெட்டுகளுக்கான மவுசுகளும் குறைவதில்லை..

குழந்தைகள்: இதற்காகவே, ஒவ்வொரு வருடமும் ஜூலை 7ம் தேதி, உலக சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்த நாளில், பிரியமானவர்களும், குழந்தைகளும், ஒருவருக்கொருவர் சாக்லேட்களை பரிசாக தந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி கொள்வார்கள்.
கடந்த 2018-ல், உலகிலேயே மிக காஸ்ட்லியான சாக்லேட் ஒன்று தயாரிக்கப்பட்டது. சர்வதேச சாக்லேட் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஒபிடோஸ் என்ற இடத்தில் தயாரான இந்த சாக்லேட், கண்காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தது.. 23 காரட் தங்க பிளேட்டினால் ஆன இந்த சாக்லேட்டுக்கு "குளோரியஸ்" என்று பெயரிடப்பட்டது. இதன் விலையோ ரூ. 6 லட்சம் ஆகும்.
தங்க ரிப்பன்: குங்குமப்பூ, மணமூட்டும் காளான், மடகாஸ்கரில் இருந்து வரவழைக்கப்பட்ட வெண்ணிலா, மற்றும் தங்க செதில்களால் இந்த சாக்லேட் தயாரிக்கப்பட்டது.. டேனியல் கோம்ஸ் என்பவர், ஒரு வருடமாக இந்த சாக்லேட்டை தயாரித்து வந்தார்.. இந்த சாக்லேட்டில் தங்கத்தால் சீரியல் எண்கள் பதியப்பட்டிருந்தன.. முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.. தங்க ரிப்பனால் சுற்றப்பட்டிருந்தன. இது அப்போது உலகத்தின் பார்வையை வெகுவாக ஈர்த்திருந்தது.
ஆனால், இப்போது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள சாக்லேட், பலரது கவனத்தை பெற்று வருகிறது.. காரணம், இந்த ஒரே ஒரு சாக்லேட், 1 கோடி ரூபாயாம்.
விதவிதமான சாக்லேட்: பென்சில்வேனியா - மாநிலத்தில் பிட்ஸ்பர்க்கில் SARRIS CHOCOLATE என்ற தொழிற்சாலை மிகவும் பிரலமானது.. இங்கு சாக்லேட்டுடன் விதவிதமான ஐஸ்கிரீம்கள் தயாராகும்.. அதுமட்டுமல்லாமல், நாம் அன்றாடம் பயன்படுத்தும், சோப்பு, சீப்பு, செருப்பு போன்ற பொருட்களின் உருவங்களிலேயே சாக்லேட்கள் தயார் செய்து, காட்சிப்படுத்துவது வாடிக்கையாகும்.
இந்நிலையில், 1,180 கிலோவில், 12 அடி உயரம், 8 அடி நீளம்,3 அடி அகலம் கொண்ட சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது... 3 மாதத்தில் 8 பேர் கொண்ட குழு இந்த சாக்லேட்டை தயாரித்துள்ளது. இதன் விலை ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர்கள் அதாவது, நம்ம ஊர் மதிப்பில், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்.
திகைத்த மக்கள்: 1 கோடி ரூபாய் சாக்லேட்டை கேள்விப்பட்டதுமே, அதனை பார்ப்பதற்காகவே, ஏராளமானோர் சாக்லேட் தொழிற்சாலைகளுக்கு திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த விலையை கேட்டதுமே பலரும் ஆச்சரியப்பட்டு திகைத்து நிற்கிறார்கள்.. விலையை கேட்டதுமே தெறித்து ஓடிவிடுவார்கள் என்று பார்த்தால், இதையும் "பெருமையுடன்" வாங்கிச்செல்ல போட்டா போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.
-
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம்












Click it and Unblock the Notifications