உலகில் கொரோனாவால் 95.20 லட்சம் பேர் பாதிப்பு.. மோசமான பாதிப்பு.. அதிர்ச்சி அளிக்கும் இந்தியா
நியூயார்க்: உலகில் கொரோனா தொற்றால் 95.20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 51.69 லட்சம் பேர் மீண்டுவிட்டனர். 4.83 பேர் உயிரிழந்துவிட்டனர். உலகின் பல்வேறு நாடுகளில் 3,866,963 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகில் கொரோனா தொற்றால் 95,20,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 4,83,958 பேர் சிகிச்சை பலன் இன்று உலகம்முழுவதும் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். அதேநேரம் உலகில் கொரோனாவில் இருந்து 51,69,213 பேர் குணம் அடைந்தனர். தற்போது 3,866,963 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உலகிலேயே கொரோனா தொற்றால் அமெரிக்காவில் தான் மிக அதிகமாக 124,280 பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 24,63,206 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 11,92,474 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் 606,881 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவில் 472,985 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகிலேயே நேற்று மிக அதிகபட்சமாக பிரேசிலில் 1103 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதற்க அடுத்தபடியாக அமெரிக்காவில 807 பேரும், மெக்ஸிகோவில 793 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 424 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் அதிகம் பேரை பறி கொடுத்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14907 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே மிக அதிகமாக பிரேசிலில் நேற்று புதிதாக 40,995 பேருக்கு தொற்று பரவி இருந்தது. 39,038 தொற்று பரவலுடன் அமெரிக்கா 2வது இடத்தையும், 16,870 பாதிப்புடன் இந்தியா 3வது இடத்தையும், 7,176 பாதிப்புடன் ரஷ்யா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications