நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய உச்சம்.. பிரேசில், இந்தியா, அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. இன்றைய நிலவரம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: பிரேசில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் அதிக அளவில் கேஸ்கள் பதிவாகி வருகின்றன.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 536,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுக்க மொத்தம் 125,336,055 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.2,755,496 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

101,267,289 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 65035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 30,702,442 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் இதுவரை 558,324 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,229,591 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 249 பேர் பலியாகி உள்ளனர்.அங்கு மொத்தம் 11,787,013 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில்

பிரேசில்

இந்தியாவில் இதுவரை 160,726 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 90564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 12,227,179 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 301,087 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ரஷ்யா

ரஷ்யா

பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 2244 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,483,471 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 96,219 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

English summary
Worst hit in Brazil and USA: 125,336,055 persons affected with Coronavirus all over the world so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X