சரியுதே டாலர்.. அமெரிக்கவுக்கு ஆப்பு! ’ஜோலடோ'வுக்கு மாறும் இந்தியா-சீனா-ரஷ்யா! கைகோர்க்கும் உலகம்
நியூயார்க்: அமெரிக்க டாலர் மதிப்பில் நிலையில்லாத தன்மை நிலவுவதால் டாலருக்கு மாற்று நாணயத்தை உலக நாடுகள் தேடி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஜோலடோவை (Zoloto) மாற்று நாணயமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஜோலடோ என்றால் என்ன? அது எப்படி டாலருக்கு மாற்றான நாணயமாக இருக்க முடியும் என பல கேள்விகள் எழுந்துள்ளது.. உண்மையில் ஜோலதோ என்றால் வேறொன்றுமில்லை.. தங்கத்தை தான் ரஷ்ய மொழியில் 'ஜோலடோ' என்பார்கள்..
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்க டாலரின் மதிப்பில் சமீப ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில்லாத தன்மை, பல நாடுகளை மாற்று நாணயத்தை தேடும் நிலைக்கு தள்ளியுள்ளது.
சர்வதேச வர்த்தகத்திலும் நிதி பரிவர்த்தனைகளிலும் டாலர் மீதான சார்பு அதிகமாக இருப்பதால், அதன் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் உலக சந்தையை நேரடியாக பாதிக்கின்றன. இதனால், டாலரின் ஆதிக்கத்தை குறைத்து, பல நாட்டு நாணயங்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்ற தேவையும் உருவாகியுள்ளது.

ஜோலடோ நாணயம்
இந்த நிலையில், இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற பெரிய பொருளாதார நாடுகள் ஒன்றிணைந்து "ஜோலடோ" (Zoloto) எனப்படும் மாற்று நாணயத்தைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து பல்வேறு வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன: "ஜோலடோ என்றால் என்ன?", "அது எப்படி டாலருக்கு மாற்றாக இயங்கும்?" என்பன போன்றவை. உண்மையில் 'ஜோலடோ' என்றால் வேறு எதுவும் இல்லை; அது ரஷ்ய மொழியில் தங்கத்தை குறிக்கும் சொல். உலக வரலாற்றில் தங்கம் உலக பொருளாதாரத்தின் அடித்தளமாக இருந்து வந்துள்ளது.
அமெரிக்க டாலர் மாற்று
ஒரு நாடு வெளியிடும் நாணயத்தின் மதிப்பு, அந்த நாட்டின் தங்கச் சேமிப்புடன் நேரடியாக தொடர்புடையதாக இருந்த காலம் இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான நாடுகள் தங்களது நாணயத்தை தங்கத்துடன் இணைக்காமல், பொருளாதார வலிமை மற்றும் அரசியல் நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு வெளியிடுகின்றன. ஆனால், சமீபத்திய உலக பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பில் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக தங்க அடிப்படையிலான நாணய அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பிரிக்ஸ் மாற்று நாணயம்
இதனைக் கருத்தில் கொண்டு, பிரிக்ஸ் (BRICS) நாடுகள் - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை - தங்களது வணிக மற்றும் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்ட 'ஜோலடோ' எனும் மாற்று நாணய அமைப்பை பரிசீலனை செய்து வருகின்றன. தங்கம் ஒரு நிலையான மதிப்புள்ள சொத்தாக இருப்பதால், அதன் அடிப்படையில் உருவாகும் நாணயம் சந்தை அதிர்வுகளால் பெரிதும் பாதிக்கப்படாது.
தங்க நாணய அமைப்பு
மேலும், தங்கத்தின் சர்வதேச தேவையும் வழங்கலும்கூட ஒப்பீட்டளவில் நிலையானவை. இதனால் ஜோலடோ உலக வணிக பரிவர்த்தனைகளில் நம்பகமான மற்றும் பாதுகாப்பான மாற்று நாணயமாக உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் மட்டுமல்லாமல், உலக பொருளாதார மையம் அமெரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் புதிய பொருளாதார மையங்களை நோக்கி திரும்பும் வழியையும் இது ஏற்படுத்தக் கூடும். காரணம் உலக அளவில் அதிக தங்கம் ஆசியாவில் தான் இருக்கிறது. குறிப்பாக சீனா, ரஷ்யா, இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 6500 டன் தங்கம் கையிருப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications