டீச்சர்னா அது எங்க பானுமதி டீச்சர்தான்.. நடிகர் ரகுமானின் 76'.. ஊட்டி பள்ளி விழாவில் நெகிழ்ச்சி
ஊட்டி பள்ளிக்கு நடிகர் ரகுமான் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.
ஊட்டி: "என்னால மறக்க முடியாத டீச்சர் பானுமதி டீச்சர்தான்.. இந்த அளவுக்கு நான் நடிக்க வந்திருக்கேன்னா அதுக்கு பானுமதி டீச்சர்தான் காரணம்" என்று பூரிப்புடன் சொல்கிறார் நடிகர் ரகுமான்.
ஊட்டியில் உள்ள பிரபலமான ஸ்கூல் ரெக்ஸ். இது ஒரு ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆகும். கிட்டத்தட்ட 1200 மாணவர்கள் இங்கு படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் அன்று படித்தவர்கள் என்றால் இன்று அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் ஒவ்வொரு துறையிலும் மின்னி வருகிறார்கள். அப்படி இங்கு படித்தவர்தான் நடிகர் ரகுமான். மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நமக்கு பரிச்சயம் ஆனவர்.

செல்ல விழா
இப்போது விஷயம் என்னவென்றால், இந்த ரெக்ஸ் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் வருஷா வருஷம் ஒருநாள் கூடுவார்கள். அப்படித்தான் இன்றும் "முன்னாள், இந்நாள் மாணவர்கள்" செல்ல விழா நடைபெற்றது.

நடிப்பு, டான்ஸ்
இந்த விழாவில் நடிகர் ரகுமான் கலந்து கொண்டார். இவர் 1976-ம் ஆண்டு இங்கு 6-ம் வகுப்பு வந்து சேர்ந்திருக்கிறார். 10-ம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்துள்ளார். படிக்கும்போதே நடிப்பு, டான்ஸ் என்று கலக்கி இருக்கிறார்.

கட்டிப்பிடித்து கொண்டார்
இவருடன் படித்த ஜுட்ஸ் என்பவர்தான் இந்த பள்ளியின் அட்மினாக இருக்கிறார். பள்ளிக்கு வந்த ரகுமான் அங்கிருந்த தன் வகுப்பு நண்பர்களை பார்த்ததும் கட்டிப்பிடித்து கொண்டார். ஒவ்வொருவரின் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார்.

ஆசிரியர்கள் போட்டோ
இதையடுத்து, கொஞ்ச நேரத்துக்கு தன்னுடைய 10-ம் வகுப்பு கிளாஸ் ரூமை சென்று பார்த்து கொண்டே நின்றார். ஹெச்.எம். ரூமில் மாட்டப்பட்டிருந்த தன் வருட ஆசிரியர்கள் போட்டோவையும் இமைக்காமல் பார்த்து நின்றார்.
|
பானுமதி டீச்சர்
மாணவர்களிடையே பேசும்போது, நீங்களும் நாளைக்கு பெரிய நிலைமைக்கு வரணும். எத்தனை வருஷம் ஆனாலும் நட்பையும் ஆசிரியர்களையும் நாம் மறக்கவே கூடாது, இன்றைக்கு இந்த அளவுக்கு நான் உயர்ந்திருக்கிறேன் என்றால், அதுக்கு காரணம் என் கிளாஸ் டீச்சர் பானுமதிதான்" என்றார்.

கிளம்பி சென்றார்
பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பள்ளியின் கட்டமைப்பு வசதிக்காக இயன்ற உதவிகளை செய்வதாக சொன்னார். காரில் ஏறும்போது, மீண்டும் ஒருமுறை தன் பள்ளியை நின்று கண்கலங்க பார்த்துவிட்டு கிளம்பி சென்றார் ரகுமான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications