ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்.. விடிய விடிய நடந்த பணி.. 3 மாநில மக்கள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை பால தடுப்புச் சுவர் சேதமடைந்தது. இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகி மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், 15 மணி நேரத்தில் தற்காலிக பாலம் அமைத்து போக்குவரத்தை அதிகாரிகள் சீர் செய்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் பகுதிகள் சர்வதேச சுற்றுலா தளங்கள் ஆகும். இந்த பகுதியில் ஏராமளான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊட்டி மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாதளம் ஆகும். இதமான கால நிலை நிலவும் மலைகளில் இளவரசியை காண தினமும் ஏராளமானோர் வருவார்கள். வார இறுதிகளில், முக்கிய விடுமுறை நாட்களில் மக்களால் வெள்ளத்தால் அலைமோதும்,

Bridge built in 15 hours in Ooty, People of 3 states are happy

இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் தான், கேரளா, கர்நாடாக மாநிங்களை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து கட்டமைப்பை கொண்டுள்ளது. வயநாடு உள்ளிட்ட கேரளாவில் உள்ளவர்கள், மைசூர் உள்ளிட்ட கர்நாடகாவில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டிற்கு வரவும் அங்கிருந்து செல்லவு ஊட்டி முக்கியமான போக்குவரத்து வழியாகவும் உள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே, மேல் கூடலுார் பழைய பாலத்தை ஒட்டி புதிய பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 6 மணி அளவில், அங்குள்ள பழைய பாலத்தை ஒட்டி கட்டப்பட்ட கருங்கல் தடுப்புகள் திடீரென இடிந்து விழுந்தது.

இதனால், நீலகிரி மாவட்டம் வழியாக தமிழகம், கர்நாடகா, கேரளா இடையே வாகன போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. ஓட்டுனர்கள், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். பல கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து , தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செல்வம், மாநில நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜா மேற்பார்வையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாலத்தை ஒட்டி தற்காலிக பாலம் அமைக்கும் பணியை உடனே துவங்கினர். அங்கு விடிய, விடிய பாலம் அமைக்கும் பணி நடந்தது.

கூடலூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரெடிமேட் 'பிரிகாஸ்ட் பாக்ஸ்' பயன்படுத்தி, ஞாயிறு காலை 9:00 மணி அளவில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. சுமார் 15 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் திறந்தவிடப்பட்டது. இதையடுத்தே தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் போக்குவரத்து சீரானது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்த பின்னர் இயல்பு நிலை திரும்பியது. இதனால் மூன்று மாநில பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+