கரும்பு தோட்டத்தில் முகாம்.. நல்ல சாப்பாடு, தண்ணீர்.. நிம்மதியாக இருக்கிறான் சின்னத்தம்பி
உடுமலை சர்க்கரை ஆலை பகுதியில் 6-வது நாளாக சின்னதம்பி முகாமிட்டு வருகிறான்.
Recommended Video

உடுமலை: பார்றா.. சின்னதம்பியை பார்க்க பொதுமக்கள் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். ஆனால் சின்னதம்பியோ கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு நல்ல சாப்பாடு, தண்ணீர் என சொகுசாக சுற்றி வருகிறான். இதனால் சின்னதம்பியை பிடிப்பதில் வனத்துறையினருக்கு தொடர்ந்து சிரமம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களாக உடுமலையில் சுற்றித்திரிந்த சின்னதம்பியை விரட்டியடிக்க மாரியப்பன், கலீல் என்ற 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன.
2 யானைகளும் சின்னதம்பியை துரத்தி துரத்தி அடிக்கும் என்று பார்த்தால், ஜோடி போட்டுக் கொண்டு சாப்பிட்டும், விளையாடியும் வருகின்றன.

கரும்பு தோட்டம்
இப்போது, சின்னதம்பி கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியையே சுற்றி சுற்றி வருகிறதாம். 26 வகையான கரும்புகள் பயிரிடப்பட்டு அவை அறுவடைக்கும் தயாராக உள்ளதாம். இந்நிலையில், சின்னதம்பி கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து மரங்களை பிடுங்கி எறிந்து சேட்டை செய்திருக்கிறான்.

சாப்பாடு, தண்ணீர்
சின்னதம்பியை கும்கியாக மாற்ற கோர்ட்டும் தடை போட்டுவிட்டதால் அப்படியும் செய்ய முடியாத நிலை. அதனால் வனத்துறையிர் 6-வது நாளாக சின்னதம்பியை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பிடிக்கவும் முயற்சி செய்து வருகிறார்கள். நல்ல சாப்பாடு, தேவையான தண்ணீர் எல்லாம் இப்போது கரும்பு ஆலை பக்கம் கிடைப்பதால், சொகுசாக இருக்கிறான் சின்னதம்பி. ஆனால் விவசாயிகளுக்குத்தான் அடிவயிற்றில் அள்ளு கிளம்புகிறது.

அச்சுறுத்தல் இல்லை
தமிழக முதன்மை வன தலைமை பாதுகாவலர் சின்னதம்பியை இன்று நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அபோது "கும்கிகளுடன் நன்றாக பழகி வருகிறது. பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும்இல்லை. காட்டுக்குள் கொண்டு போய் விட்டாலும், திரும்பவும் அது சமவெளி பகுதிக்குத்தான் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் காட்டுக்குள் சின்னதம்பி வசிக்க வாய்ப்பு இல்லை" என்றார்.

இரவு பகல் வேலை
இதனிடையே சின்னதம்பியை பார்க்க பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். ஒரு பக்கம் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும், இன்னொரு பக்கம் சின்னதம்பியை கண்காணிப்பதில் 80-க்கும் மேற்பட்ட வன ஊழியர்களும் இரவு பகல் என பாடுபட்டு வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications