ஊட்டின்னாலே கிக்குதான்.. அதிலும் சலிவான் கோர்ட் ஹோட்டல் கேக்குன்னா கிக்கோ கிக்!
ஊட்டி சலிவான் கோர்ட் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் விழா தொடங்கியது
ஊட்டி: உலர் பழங்களைக்கொண்டு 200 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா ஊட்டி சலிவான் கோர்ட் ஓட்டலில் நடைபெற்றது.
ஊட்டியில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கேக் தயாரிப்பு விழா நடந்து வருகிறது.
இந்த விழாவில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த கேக்கை தயாரிப்பார்கள். மைதா மாவுடன் உலர் திராட்சை, செரி, வால்நட், பாதாம், பிஸ்தா உட்பட, 30-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஒன்றாக கலக்கப்படும். அதனுடன் விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின் உள்ளிட்ட மது வகைகளும் கேக் கலவையுடன் ஒன்றாக கலக்கப்படும்.
[2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்கனுமா.. அப்போ 5 நிமிஷத்துக்கு ஒருவாட்டி நாள் ஃபுல்லா வெடிக்கலாமா சார்?]

35 நாட்கள்
பிறகு இந்த கலவையை குறைந்தது ஒரு மாதத்துக்காவது பாதுகாப்பாக வைத்து பின், கேக் தயாரிக்கப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த பொருட்கள் ஊறி வருகிறதோ அந்த அளவுக்கு கேக்கின் ருசியும் அதிகமாகும். இது கிறிஸ்துவமஸ் விழாவுக்காகவே தயாரிக்கப்படும் கேக் என்பதால் இதற்கான விழா எப்போதுமே எல்லா ஸ்டார் ஹோட்டல்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும்.

ஊட்டியை கண்டுபிடித்தவர்
அதன்படி இந்தாண்டுக்கான விழா சலிவான் கோர்ட் ஹோட்டலில் நடைபெற்றது. ஜான் சலிவன் என்பவர்தான் ஊட்டியை கண்டுபிடித்த வெளிநாட்டுக்காரர். அவரது பெயரிலேயே இந்த ஹோட்டல் இயங்கி வருகிறது. அதனால் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் இங்கு வந்து தங்குவார்கள். அதேபோல நிறைய சினிமா பிரபலங்களுக்கும் இந்த ஹோட்டல் என்றாலே தனி பிரியம்தான்.

பொது மேலாளர் முரளிகுமார்
இந்த ஹோட்டலில்தான் கேக் தயாரிக்கும் விழா ஹோட்டலின் பொது மேலாளர் முரளிகுமார் மற்றும் செஃப் நடராஜன் தலைமையில் தொடங்கியது. சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு பிரம்மாண்ட கேக் தயாரிக்கும் பணியில் இறங்கினர். அவர்களுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடம் கலந்து கொண்டு ஊழியர்களின் கேக் தயாரிக்கும் பணிக்கு உற்சாகப்படுத்தினர்.

200 கிலோ கேக்
கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாள் இந்த 200 கிலோ கேக் தயாராகிவிடும் என்றும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இப்படி சிறப்பாக செய்யப்படும் கிறிஸ்துமஸ் கேக் மீது ஒரு தனி கிக் என்றும் செஃப் நடராஜன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications