மனநலக் காப்பகத்தில் இறந்த 100 பேரை தடயமே இல்லாமல் புதைத்த படத் தயாரிப்பாளர்! பந்தலூரில் பக் பக் பக்!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பந்தூரில் அனுமதியின்றி நடத்தப்பட்ட மன நலக் காப்பகத்தில் இறந்த 100-க்கும் மேற்பட்டோரை யாருக்கும் தெரியாமல் காப்பகம் அருகே உள்ள இடத்தில் புதைத்ததாக விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் அகஸ்டின் லவ்ஷேர் என்ற பெயரில் ஒரு சாரிடபிள் டிரஸ்ட்டை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளை 1999-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அவர் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

nilgiri

இதையடுத்து அகஸ்டின் அந்த அறக்கட்டளையை மனநலக் காப்பகமாக மாற்றி நடத்தி வந்தார். இந்த காப்பகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 200 பேர் உறவினர்களால் தங்கள் வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் மீதுமுள்ள 300-க்கும் மேற்பட்டோர் தங்குவதற்கு இடமில்லாத நிலை இருந்துள்ளது.

இதனால் அங்கு பாதுகாப்பு, சுகாதார வசதியின்றி அவர்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு யாரோ புகார் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து கடந்த 9ஆம் தேதி அந்த காப்பகத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த காப்பகத்திற்கு சீல் வைத்தனர்.

அங்கிருந்த 13 மனநோயாளிகள் மற்றும் இரு பணியாளர்களை கோவை மற்றும் ஊட்டி காப்பகங்களில் சேர்த்தனர். இந்த காப்பகத்தில் இதுவரை100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தெரிகிறது. அவர்களுடைய உடல்கள் காப்பகத்தை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில் யாருக்கும் தெரியாமல் நல்லடக்கம் செய்யப்பட்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து காப்பக உரிமையாளர் அகஸ்டின், அவருடைய மனைவி கிரேசி, காப்பக பொறுப்பாளர் எலிசபெத் உள்பட 10 பேரிடம் நெலாக்கோட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அகஸ்டின் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பகத்தில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணை நடத்திய பிறகே இந்த காப்பகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அனுமதியின்றி காப்பகம் நடத்தி வந்த அகஸ்டின் அண்மையில் புதர் என்ற திரைப்படத்தை ரூ 2.43 கோடி செலவில் தயாரித்துள்ளார். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் அகஸ்டினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+