நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேடி வந்து தேன் குடித்து செல்லும் ஒத்த கரடி.. பறவைகளின் கூட்டை பிரித்து நாசம்.. குன்னூரில்!

குன்னூர் அருகே நடமாடி வரும் கரடியை பிடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேடி வந்து தேன் குடித்து செல்லும் ஒத்த கரடி-வீடியோ

    ஊட்டி:குன்னூர் அருகே மரங்களில் ஏறி பறவைகளின் கூட்டை பிரித்து விட்டு அட்டகாசம் செய்து வரும் கரடியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம், மனிதர்கள் வனப்பகுதிக்கு உட்பட்ட இடங்களில் கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துவிட்டதால், விலங்குகள் காட்டிலிருந்து ஊருக்குள் சாப்பாடு, தண்ணீர் தேடி வர ஆரம்பித்துவிட்டன.

    குறிப்பாக தேயிலை தோட்டப்பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த கரடிகள் இப்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.

    பொதுமக்கள் அச்சம்

    பொதுமக்கள் அச்சம்

    குன்னூர் அடுத்து கொலகொம்பை பகுதியில் வனவிலங்குகளுக்கு ரொம்ப ஃபேமஸ் ஆன பகுதி. இங்கு ஏற்கனவே அடிக்கடி காட்டு எருமை, கரடி, மலை பாம்பு, சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகள் அடிக்கடி வந்துவிடும். இதனால் அங்கு வசித்து வருபவர்களை தாக்குவதும், உயிர் பலி வாங்குவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    கூடுகள்

    கூடுகள்

    இதனால் பகல், இரவு என எப்போதுமே வெளியில் போக, வர மக்கள் பயந்தபடியே உள்ளனர்.இந்த சமயத்தில் ஒரு கரடி ஒன்று புதுசாக ஊருக்குள் வந்துள்ளது. கிரேக்மோர் பகுதியில் பகல் நேரத்திலேயே வரும் இந்த கரடி நேராக சென்று மரங்களில் ஏறிக் கொள்கிறது. முதல் வேலையாக பறவைகள் கட்டி வைத்துள்ள கூண்டுகளை பிரிக்க ஆரம்பித்து விடுகிறது.

    டீ காடு

    டீ காடு

    பிறகு தேன்கூடுகளை கலைத்துவிட்டு, இருக்கும் தேனை முற்றிலும் குடித்துவிட்டு ஏப்பம் விட்டுதான் அங்கிருந்து நகர்கிறது. பொதுமக்கள் யாராவது பார்த்துவிட்டால், டீகாட்டுக்குள் சென்று ஓடி மறைந்து விடுகிறது.

    கோரிக்கை

    கோரிக்கை

    இதனால் மரங்கள் பாழாகின்றன, தேன்கள் காலியாகி வருகின்றன, தேயிலை தோட்டமும் நாசமாகி வருகிறது என்பதால் அந்த ஒத்த கரடியை பிடிக்க மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Coonoor People panic for bear walk inside the tea estate
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X