ஊட்டி மலை ரயில் தடம்புரண்டு விபத்து.. அதிர்ந்த பயணிகள்.. ரயில் சேவை ரத்து!
நீலகிரி : குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதால், மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலில், கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். யாருக்கும் எந்த வித காயமும் இல்லை.

மலை ரயில் தடம் புரண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. அங்கு இயக்கப்படும் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தனது குடும்பத்தினருடன் உதகையில் இருந்து மலை ரயில் மூலம் குன்னூர் சென்றார். ஊட்டி - குன்னூர் இடையே கேத்தி பள்ளத்தாக்கின் இயற்கை காட்சி, படகு இல்லம் குகை உள்ளிட்டவற்றை கடந்து ரயில் சென்றதை பார்த்து ரசித்தார்.
இந்நிலையில், இன்று குன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் தடம்புரண்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் சூழலில் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications