ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு.. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முக்கிய அறிவிப்பு..!
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் கட்டாயம்
ஊட்டி: அண்டை மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா "நெகட்டிவ்" சர்ட்டிபிகேட் கட்டாயம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்தபோதிலும், நபர்கள் வெளி மாவட்டத்துக்கு சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து வருகிறது.. ஒருநாளைக்கு 50 பேருக்காவது தொற்று உறுதி செய்யப்படுகிறது.. எனினும் தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

நீலகிரிக்கு இருபுறமும் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உள்ளன.. இந்த 2 மாநிலங்களிலுமே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளன.. அதிலும் கேரளாவில் 3வது அலை பரவல் ஆபத்தும் உள்ளது.. எனவே, நீலகிரிக்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது: கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு சீட்டுடன் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
இல்லை எனில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அந்த சான்றிதழ்கள் இல்லையெனில் நீலகிரிக்கு வர அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் சோதனைச்சாவடிகளில் சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை மற்றும் சுய முகவரி சரிபார்ப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் சோதனைச்சாவடிகளில் சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை மற்றும் சுய முகவரி சரிபார்ப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். இல்லை எனில் அபராதம் விதிக்கப்பட்டு நீலகிரிக்கு வர அனுமதி மறுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications