அரசியலில் அண்ணாமலை ஒரு பூஜ்யம்! முதல்வரை பற்றி பேச அவருக்கு தகுதியில்லை! சீறிய ஆ.ராசா!
நீலகிரி: அரசியலில் அண்ணாமலை ஒரு பூஜ்யம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி பேச அவருக்கு அறவே தகுதியில்லை எனவும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிவரும் அரும்பணிகள் காரணமாக மக்கள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்து வரும் அவர், எடப்பாடி பழனிசாமியை பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, நீலகிரி மாவட்டத்தில் தொடர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், திமுக அரசின் செயல்பாடுகளை எண்ணிப்பார்த்து உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் ஆதரவளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் எவ்வாறு வேகமாக செயல்படுகிறாரோ அதேபோல் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் வேகமாக செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் அதன் காரணமாக திமுக வேட்பாளர்களை ஆதரிக்க அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை அரசியலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதாகவும் இது என்ன வகை அரசியலோ எனவும் ஆ.ராசா நொந்துகொண்டார்.

அண்ணாமலை பூஜ்யம்
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி பேசவோ அவரிடம் கேள்வி எழுப்பவோ அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அரசியலில் அண்ணாமலை ஒரு பூஜ்யம் எனவும் ஆ.ராசா விமர்சித்தார். அரசியலில் ஸ்டாலினின் உழைப்பு, தியாகம், பணிகளுடன் யாரையும் ஒப்பிட முடியாது என அவர் தெரிவித்தார். மேற்கொண்டு அண்ணாமலை பற்றி எதுவும் பேச தாம் விரும்பவில்லை எனக் கூறினார் ஆ.ராசா.

திமுக -பாஜக
உள்ளாட்சித் தேர்தலில் திமுக -பாஜக இடையே அண்மைக்காலமாக வார்த்தைப்போர் முற்றி வருவது கவனிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை அதிமுகவுக்கு இணையாக பாஜக பற்றியும் தனது பிரச்சாரத்தில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பாஜகவும் திமுகவை பற்றி மட்டுமே விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக












Click it and Unblock the Notifications