Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலகிரியின் "மாஸ்டர் மாதன்".. திராவிட கட்சிக்கே டஃப் தந்த லீடர்.. மலை மாவட்ட பாஜகவின் நம்பிக்கை தூண்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் பாஜக மூத்த தலைவர் மாஸ்டர் மாதனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.. நேரிலும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்

93 வயதாகும் மூத்த தலைவர் மாஸ்டர் மாதன், கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பிரஸ் காலனி, பாலாஜி கார்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.. சமீப காலமாகவே உடல் நலம் குன்றியிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார் மாஸ்டர் மாதன்..

Nilgiris Master Mathan Tamil Nadu BJP


மாதன்:
இதனால், பாஜக தலைவர்கள் தொடர்ந்து மாதனை சந்தித்து நலம் விசாரித்தபடியே வந்தனர். 4 நாட்களுக்கு முன்புகூட, அண்ணாமலை மாதனின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்... சுமார் ஒரு மணி நேரம் அவரது வீட்டில் இருந்த அண்ணாமலை, மாஸ்டர் மாதனின் உறவினர்கள், நண்பர்கள், பாஜக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பேசிவிட்டுதான், கோவைக்கு புறப்பட்டு போனார்.

தற்போது சிகிச்சை பலனின்றி மாதனின் உயிர் பிரிந்துவிட்டது.. நீலகிரி தொகுதியின் முன்னாள் எம்பியும், பாஜக மூத்த தலைவருமான மாஸ்டர் மாதனின் இழப்பு நீலகிரிக்கு பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது..

மோடி: பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய இரங்கல் பதிவில், "முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாஸ்டர் மதன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் தமது சமூக சேவை முயற்சிகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்ததற்காகவும் என்றென்றும் நினைவுகூறப்படுவார். தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் அவர் அரும்பாடு பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று தமிழிலேயே பதிவிட்டிருக்கிறார்.

மாஸ்டர் மாதனின் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.. "மாஸ்டர் மாதன் தனது நற்குணங்களால் அனைத்து மக்களின் அன்பைப் பெற்று, சிறந்த முறையில் மக்களுக்கு சமூக சேவையாற்றி வந்தவர். இந்த துயரமான சமயத்தில், மாஸ்டர் மாதனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று எல்.முருகன் கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில், பாஜகவின் வளர்ச்சிக்கும், நீலகிரி மக்களின் முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்ட மாஸ்டர் மாதன், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மாஸ்டர் மாதன்: யாரிந்த மாதன்? நீலகிரி மாவட்டம் , இதலார் பஞ்சாயத்தில் படுகர் இனத்தில் பிறந்தவர் மாதன்.. மலைமாவட்ட அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்தான் மாஸ்டர் மாதன்.. நீலகிரி மாவட்ட பாஜக முன்னாள் மாவட்ட தலைவராகவும், தமிழக பா.ஜ.கவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். 2 முறை பாஜகவின் எம்பியாகவும் பதவி வகித்தவர்.

நீலகிரியை பொறுத்தவரை, இதுவரை 7 முறை காங்கிரஸ் கட்சி நீலகிரியில் வெற்றி பெற்றிருக்கிறது.. குறிப்பாக, காங்கிரஸின் ஆர்.பிரபு இங்கு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.. அதேபோல, 1971, 2009, 2019 ஆண்டுகளில் திமுகவும், 1977, 2014 ஆண்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

வாக்குகள்: இந்த ஜாம்பவான் கட்சிகளுக்கு நடுவில், 1991 ஆண்டே நீலகிரியில் களம் கண்டு 41,231வாக்குகளையும், 1996 ஆண்டு 32,185 வாக்குகளையும், பெற்றிருந்தார்.

இதில், 1998ம் ஆண்டு பாரத பிரதமராக இருந்த வாஜ்பாய் காலத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.. இதில், 13 மாத காலம் ஆட்சியில் இருந்து அதிமுக கூட்டணி விலகி கொண்டவுடன், வாஜ்பாய் பாஜக அரசு ஆட்சி கவிழ்ந்தது,.. இதனால், 1999 மீண்டும் தேர்தல் நடைபெற்றது, இதில் திமுக உடன் கூட்டணி வைத்து மறுபடியும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெற்றி: அந்தவகையில் 1998 தேர்தலில், 322818 வாக்குகளை பெற்றிருந்தார்.. இது அப்போதைய தேர்தலில் 46.00% சதவீத வாக்கு வங்கியை தந்திருந்தது.. அதேபோல, 1999-ல், 369828 வாக்குகளை பெற்றிருந்தார்.. இது 51.00 வாக்கு சதவீதமாக எகிறியது... கடந்த 2004-ல் மாஸ்டர் மாதன் பாஜக சார்பில் போட்டியிட்டு, 257619 வாக்குகளை பெற்றார்.. அந்தவகையில், பாஜக வாக்கு சதவீதம் 33.00% ஆக உயர்ந்தது..

ஆக, 2 திராவிட கட்சிகளின் ஆதிக்கம் + காங்கிரஸுக்கான ஆதரவு என்று மட்டுமேயிருந்த நீலகிரியில், பாஜகவை முதன்முதலில் வேர்விட செய்தார் மாஸ்டர் மாதன்.. 1998, மற்றும் 1999 டூ 2004 வரை என 2 முறை எம்பியாக பாஜகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சராக ஆ.ராசா பொறுப்பு வகிப்பது போலவே, பாஜகவின் மாஸ்டர் மாதனும் மத்திய இணை அமைச்சராக பதவியை வகித்தவர்..

பாஜக: நீலகிரி மாவட்டம் படுகர் இனத்தை சேர்ந்த முக்கிய தலைவருமாகவே விளங்கி வரும் மாதன், அன்று முதல் இன்றுவரை நீலகிரி பாஜகவை வலிமை நிறைந்த கட்சியாகவே வைத்திருக்க செய்கிறார்.

நீலகிரியில் வைத்திருக்கும் மாஸ்டர் மாதன் தக்க வைத்திருக்கும், இந்த வாக்கு சதவீதத்தை முன்னிறுத்தியே, ஒவ்வொரு தேர்தலின்போதும், மத்திய அமைச்சர் எல்.முருகனும் இந்த தொகுதியை விடாமல் குறி வைத்து வந்தார். கடந்த 2019 தேர்தலிலும், நீலகிரியில் கடுமையான போட்டி நிலவியது என்றாலும், 73.79% வாக்குகள் பாஜகவுக்கு அப்போது பதிவாகியிருந்ததே இதற்கு சாட்சியாகும்..

கூட்டணி நெருக்கடி: ஒருவேளை, சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால், நிச்சயம் திமுகவுக்கு நெருக்கடியை தந்திருக்கலாம் என்றுகூட அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியிருந்தனர். அந்த அளவுக்கு மாஸ்டர் மாதன் மீதான நம்பிக்கை பாஜகவுக்கு என்றுமே இருந்து வந்தது.. அதுமட்டுமல்ல, நீலகிரியில் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை துவக்குவதற்கு முன்பு, மாஸ்டர் மாதனை சந்தித்து ஆசியும், வாழ்த்தையும் பெற்றிருந்தார் எல்.முருகன்..

நீலகிரி தொகுதியில், கடந்த காலங்கள் முதலே, எம்.பி., தேர்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசில் பெரியளவிலான பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.. அப்படியே கிடைத்தாலும், அந்த பதவி நிலையில்லாமல் இருந்து வந்தது.. 2 முறை எம்பியாக இருந்த மாஸ்டர் மாதனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஒட்டுமொத்த நீலகிரியும் எதிர்பார்த்ததாம்.. ஆனால், இறுதிவரை அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

தாமரை: எனினும், மாதன் மீது தனிப்பிரியம் வைத்திருந்தாராம் வாஜ்பாய்.. கடைசிவரை வாஜ்பாய்க்கு நம்பிக்கைக்குறியவராக மாதன் திகழ்ந்து வந்துள்ளார். மிகப்பெரிய தலைவரை இழந்துவிட்டசோகத்தில் இன்று நீலகிரி காணப்படுகிறது.. எனினும், இனிவரும் தேர்தல் காலங்களில் பாஜகவின் செல்வாக்கும், வாக்கு வங்கியும் நீலகிரியில் உயருமானால், அதில், மாஸ்டர் மாதனின் அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும், "தாமரை"யில் கலந்தேயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+