ஆஸ்கர் ஃபங்ஷன் டயட்டை விடுங்க.. முதுமலை தெப்பக்காடு முகாமில் யானை ரகுவின் டயட் மெனு என்ன தெரியுமா?
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் வழங்கப்படும் உணவுகள் என்னென்ன தெரியுமா
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு எந்த மாதிரியான உணவு வழங்கப்படும் என்பது தெரியுமா?
தாயை பிரிந்து தவித்த இரு குட்டிகளை முதுமலை காட்டில் வைத்து தம்பதி வளர்த்து வந்தனர். அந்த குட்டிகளை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வந்த நிலையில் அதை இரு ஆண்டுகளாக அவர்களுடன் இருந்து தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படத்தை இயக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை இயக்கியவர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ்.
கடந்த 2017ஆம் ஆண்டு தேன்கனிக்கோட்டை பகுதியில் தாயை பிரிந்த ஆண் குட்டி யானையையும் 2018ஆம் ஆண்டு தாயை பிரிந்து சத்தியமங்கலம் பகுதியில் சுற்றித் திரிந்த பெண் குட்டி யானையையும் முதுமலைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த யானைகளுக்கு ரகு, அம்மு என பெயரிடப்பட்டது.

வளர்க்கும் பொறுப்பு
இந்த யானைகளை வளர்க்கும் பொறுப்பு யானை பராமரிப்பாளர்களான காட்டு நாயக்கர் பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கு கொடுக்கப்பட்டது. இவர்கள் இந்த யானையை குழந்தைகள் போல் வளர்த்து வந்தனர். இந்த கால கட்டத்தில் அந்த யானையின் பாசத்தையும் அந்த தம்பதியின் அர்ப்பணிப்பு குணத்தையும் பார்த்த இயக்குநர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் அந்த சம்பவத்தை குறும்படமாக எடுத்தார்.

தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்
அதற்கு தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் என பெயரிட்டார். அந்த படம் ஆஸ்கர் விருது பெற்றது. இந்த குறும்படத்தில் நடித்த ரகு எனும் யானை உலக அளவில் பேமஸ் ஆகியுள்ளது. பெள்ளியின் உணவை திருடி உண்ணும் ரகுவின் சுட்டித்தனம், பெள்ளியுடனே குழந்தை போல் தூங்கும் குழந்தைத்தனம், தாய் இல்லாத குறையை தீர்த்து குழந்தையாக பார்த்து கொண்ட பெள்ளியின் தாய்மை இவை எல்லாம் அந்த குறும்படத்தில் தத்ரூபமாக உள்ளது.

ஒரே பாகனிடம்
பொதுவாக எந்த யானையும் தொடர்ந்து ஒரே பாகனிடம் வளர விடக் கூடாதாம். அதனால் அந்த யானைகள் இரண்டு ஒரு குறிப்பிட்ட வயதுவந்தவுடன் பெள்ளி, பொம்மன் தம்பதியிடம் இருந்து பிரிந்து தெப்பக்காடு யானைகள் முகாமில் வேறு பாகன்களிடம் வளர்ந்து வருகிறது. தற்போது அந்த யானையை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். ஊட்டிக்கு செல்லும் மக்கள் முதுமலைக்கு வந்து அப்படியே யானைகள் முகாமையும் பார்த்துவிட்டு ரகுவையும் பார்க்கிறார்கள்.

தெப்பக்காடு
தெப்பக்காடு வரும் சுற்றுலா பயணிகளின் முதல் கேள்வியே ரகு எங்கே என்பதுதானாம். இந்த நிலையில் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் தாயை இழந்த யானைகள், யானை கூட்டத்தால் துரத்திவிடப்பட்ட யானைகள் என 20 க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. இவற்றுக்கு நாள்தோறும் எந்த மாதிரியான உணவுகள் கொடுக்கப்படுகிறது என்பது குறித்து அரிய மக்கள் ஆவலாக உள்ளார்கள். இது குறித்த விளம்பர பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

டயட் மெனு
கேம்பில் யானைகளுக்கு கொள்ளு, ராகி, அரிசி, உப்பு, வெல்லம், தாதுக்களின் கலவை, தேங்காய், கரும்பு ஆகியவை வழங்குகிறார்கள். இதில் உப்பு, வெல்லம் ஆகியவை ராகி, கொள்ளு, அரிசி, தாதுக்களின் கலவை ஆகியவற்றில் சேர்ப்பார்கள் என தெரிகிறது. எனவே ரகுவும் இந்த உணவைதான் விரும்பு உண்கிறாராம். பெள்ளியிடம் இருந்த போது பலாபழத்தை விரும்பி உண்டது. இதை நாம் வீடியோவில் பார்த்தோம். தற்போது முகாமில் கொடுக்கும் உணவை விரும்பி சுவைக்கிறதாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications