விட்டாச்சு லீவு..ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா? கண்டிப்பாக இதை மறக்காதீங்க! வெளியான ஸ்ட்ரிக்ட் ஆர்டர்
நீலகிரி : கடந்த மே மாதம் முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த 4 மாதங்களாக அமலில் இருக்கிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோடைக்காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இப்படி கோடைக்காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விபரங்களான பயணிக்கும் வாகனங்களின் பதிவெண், அவர்கள் வரும் நாள், தங்கும் காலஅளவு, தங்கம் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் கோடை கொடைக்கானல், நீலகிரியை சுற்றிப்பார்க்கவும் வரும் சுற்றுலா பயணிகள் முறையான இ-பாஸ்க்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும்.
மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து கடந்த மேதம் 6ஆம் முதல் காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற்று கொள்ளலாம். வெளிநாட்டு பயணிகள் தங்களுடைய இ-மெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டு பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்று சுற்றுலா சென்று வந்தனர். இதனால் எத்தனை பயணிகள் வந்தனர், அவர்கள் வந்த வாகனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல் மாவட்ட நிர்வாககளுக்கு முழுமையாக கிடைத்தது. இதன் காரணமாக அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து தர முடிந்தது. இந்நிலையில் இ- பாஸ் நடைமுறை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த நீட்டிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமா இல்லை வேண்டாமா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. பலர் இ-பாஸுக்காக விண்ணப்பித்த நிலையில், சில விண்ணப்பிக்காமல் செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இ-பாஸ் நடைமுறை தொடரும் எனவும் நீதிமன்றத்தின் மறு உத்தரவுக்குப் பிறகே இ-பாஸ் தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தற்போதைய சூழலில் இ-பாஸ் நடைமுறை தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். இதனால் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்லும் பயணிகள் எடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications