50 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத மலைக்கிராமம் - ‘விடியலை’தந்த முதல்வர் ஸ்டாலின்
நீலகிரி: திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், 'விடியல் ஆட்சி' தமிழ்நாட்டில் உருவாகப் போகிறது என்றார் மு.க.ஸ்டாலின். அந்த 'விடியல்' என்ற சொல்லுக்குச் சரியான அர்த்தத்தை நீலகிரி மாவட்ட பழங்குடி மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர்.
ஏறத்தாழ 50 வருடங்களாக மின்சார வசதியே இல்லாத கிராமங்களுக்கு முதல்வர் ஸ்டாலின், மின் இணைப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார். இதனால் புதிய ஒளிமயமான வாழ்வைப் பெற்றுள்ளது குன்னூர் சுற்றி உள்ள பழங்குடி கிராமங்கள்.
வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த இந்தக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் முதன்முறையாக மின் வசதியை அனுபவித்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கையை அம்மக்கள் 50 ஆண்டுகளாக வைத்து வந்தாலும், இன்று ஆட்சி செய்பவர் காதுகளுக்கு எட்டி இருக்கிறது. அப்படி ஒளிமயமான கிராமமாக மாறி இருக்கும் மேல் சேம்புக்கரை, கீழ் சேம்புக்கரை, ஜோகிகோம்பை ஆகிய சில கிராமங்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை படம்பிடித்துக் காட்டுகிறது.
உதவிப் பொறியாளராக பணியாற்றி வரும் சுகுணா, "இந்தப் பகுதிக்குப் பெயர் ஜோகிகோம்பை. இது உதகமண்டலத்தில் குன்னூருக்கு அருகே உள்ள மலைக்கிராமம். இங்கு அதிகப்படியான பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

ஏன் 50 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை?
இந்தப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாமல் இருந்தது. அதனால் இந்த மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வந்தனர். ஏனென்றால் இது அதிகப்படியான வனவிலங்குகள் நடமாடும் பகுதி. இந்த மக்களின் அனைத்து தேவைகளுக்கும் ஏறக்குறைய இரண்டரை கி.மீ அளவு பயணித்துச் செல்லவேண்டும்.
வீடுகளில் மட்டும் இல்லை. தெருவில்கூட மின்சார வசதி இல்லை. அதனால் தெருவிளக்குகள் கூட கிடையாது. இப்படித்தான் இவ்வளவு காலமும் இந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் இந்தக் கிராமத்திற்கு மின்வசதி செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கை உயர் அதிகாரிகள் அனைவரின் பார்வைக்கும் சென்றது. உடனடியாக மின்சாரத்துறை சார்பாக நடவடிக்கை எடுக்க எங்கள் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். மின்சார வசதியைச் செய்து தருவதற்கான பணிகளில் இறங்கினோம். இன்று இந்தக் கிராமத்திற்கு மின்சாரம் கிடைத்திருக்கிறது. 50 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக இம்மக்கள் வெளிச்சத்தைப் பார்த்திருக்கிறார்கள்" என்கிறார்
நீலகிரி குறும்பர் சமுதாயத்தின் தலைவர் லஷ்மணன் பேசுகையில், "குன்னூரிலிருந்து 15 கி.மீட்டர் தூரத்தில் எங்கள் கிராமம் உள்ளது. ஏறக்குறை இங்கு 87 குடும்பங்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு முன்னால் 8 கி.மீட்டர் வரை மின்சார வசதி செய்யப்பட்டு இருந்தது. அதற்கு மேல் நீட்டிக்கவில்லை. அதுகூட கடுமையான போராட்டத்தின் விளைவாகத்தான் கிடைத்தது.

பழங்குடி மக்களுக்கு சிமெண்ட் வீடுகள்:
இப்போது எங்கள் கிராமம் வரை நீட்டித்துள்ளார்கள். எங்கள் பகுதியில் மட்டும் 27 கம்பங்கள் புதியதாக மின்சார வசதியைப் பெற்று இருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவினால்தான் இது கிடைத்துள்ளது. அவருக்கு எங்கள் கிராம மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்கிறார்
"எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக இக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். முன்பு தங்கக்கூடச் சரியான வீடு இல்லாமல் கூரை கொட்டகையில் வாழ்ந்துவந்தோம். இப்போதுதான் முதல்வர் ஸ்டாலின் அய்யா வீடு கட்டித்தர உத்தரவு போட்டிருந்தார். வீடும் கட்டித்தந்திருக்கிறார்கள். சிமெண்ட் வீடும். மின் இணைப்பும் கிடைத்திருக்கிறது.
பல வருஷமா இருட்டிவிட்டால் வெளியே வரமாட்டோம். சுற்றிலும் காடு. அவசர தேவைக்கும் வெளியே போக முடியாது. விடிந்தால்தான் திரும்ப வெளியே போகமுடியும். இரவில் யானைகள் குடியிருப்பில் புகுந்துவிட்டால் முன்பு பெரிய மூங்கில் குச்சியில் தீப்பந்தம் செய்து பிடித்துக் கொண்டுதான் வெளியே போவோம். இப்போது அது தேவையில்லை. இப்போது அப்படி இல்லை. மின் விளக்குப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். வீட்டிலும் மின்சாரம் இருக்கிறது.

டிவியே பார்க்காத மலைவாழ் மக்கள்:
பிள்ளைகளும் பள்ளியில் கொடுத்த லேப் டாப் ஐ சார்ஜ் போட முடிகிறது. இனிமேல் மிக்சி, கிரைண்டர் எல்லாம் பயன்படுத்தலாம். செல்போன் ஜார்ஜ் போட்ட முடிந்திருக்கிறது. டிவியில் செய்தி கேட்க முடிகிறது. இதுவரை நான் டிவியே பார்த்ததில்லை. முதன்முறையாக ஒரு வீட்டில் டிவி பார்த்தேன். அதற்கு இந்த மின்சார வசதிதான் காரணம்.
இப்படிப் பல புதிய அனுபவங்களை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது" என்கிறார் சேம்புக்கரை கிராமவாசி கிருஷ்ணன்
உதவிப் பொறியாளர் ஜான்சன், "இந்தக் கிராமத்திற்கு மின்சார வசதியை ஏற்படுத்தித் தரப் பல இடர்பாடுகள் இருந்தன. குறிப்பாக மலைக்கிராம பகுதிக்குள் மின் கம்பிகளைக் கொண்டு செல்ல வனத்துறை அனுமதி தேவை. சாலைவசதியே இங்கே இல்லை. அப்படிப்பட்ட பகுதிக்கு மின் கம்பங்களைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். பகல் நேரங்களிலேயே இங்கே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதை எல்லாம் சமாளித்துத்தான் வேலைகளைச் செய்தோம்.
இந்த மலைவாழ் பகுதிக்குள் 37 மின் கம்பங்களைக் கொண்டு வர மதிப்பீடு செய்யப்பட்டு, மின்துறை சார்பாக முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தோம். உடனடியாக ஒப்புதல் கொடுத்தார். மின்னல் வேகத்தில் வேலைகள் முடிக்கப்பட்டு, இன்று இந்தக் கிராமம் வெளிச்சம் பெற்றுள்ளது" என்கிறார்.
தமிழ்நாடு மின்சார வாரிய குன்னூர் கோட்டப் பரிவில் பணியாற்றி வரும் சேகர், "எங்கள் சுற்றுவட்டாரத்தில் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே மின்சார வசதி இல்லாத கிராமமாக இது இருந்தது. முதன்முறையாக அணில் காடு என்ற பகுதிக்கு மின் இணைப்பைக் கொண்டுசென்றோம். அதற்குள்ளாக ஏழு பழங்குடி குடும்பங்கள் வசித்துவருகின்றன. அதற்கு மின்சாரம் கொடுத்தோம். அந்தளவு பெரிய மகிழ்ச்சி அந்த மக்களுக்கு.

முதன்முதலாகச் செய்த முதல்வர் ஸ்டாலின்:
அதேபோலத்தான் மேல் சேம்புக்கரை, கீழ் சேம்புக்கரை இரண்டு பகுதிகள். இங்கு மின்சாரம் கொண்டுபோவதற்காகக் கிட்டத்தட்ட 48 மின் கம்பங்களை அமைத்து, 8 கி.மீட்டருக்கு மின் கம்பிகளை இணைத்துக் கொண்டு சென்று மின்வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளோம். எந்த ஆட்சியிலும் இந்த முயற்சியை யாரும் எடுக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின்தான் முதன்முறையாக இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தந்துள்ளார்" என்கிறார்
மாவட்ட ஆட்சியர் அம்ரீத் "நீலகிரி மாவட்டத்தில் 7லட்சத்து 50 பேர் வசிக்கின்றனர். விவசாயம்தான் பிரதான தொழில். தேயிலைத் தோட்ட விவசாயிகள் மிகுந்த மாவட்டம். நீலகிரி கிட்டத்தட்ட 67% வனப்பகுதிதான். ஆறுவகையான பழங்குடியினர் சுமார் 40 ஆயிரம் பேர் இங்கே வாழ்ந்துவருகிறார்கள்" என்கிறார்.
எப்படியோ 50 ஆண்டுகளாக வெளிச்சம் பெறாத கிராமத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தில் ஒளியைப் பாய்ச்சி உள்ளார். இங்கு இனிமேல் இரவிலும் சூரியன் உதிக்கும்.
-
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications