மீண்டும் சிக்கிய டிடிஎஃப் வாசன்: பயங்கர வேகம்.. நிற்காமல் பறந்த பைக்- மடக்கிப் பிடித்த இன்னொரு டீம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமான பைக்கில் சென்றபோது போலீசார் அவரை நிறுத்த முயன்றும் நிற்காமல் சென்றுள்ளார். மற்ற போலிசாருக்கு தகவல் கொடுத்து டிடிஎஃப் வாசனை மடக்கிப் பிடித்து அபராத விதித்தனர்.
கோவையை சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன். ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய அதிவேக பைக்கில் படுபயங்கரமான வேகத்தில் மேல் சென்று, அதை வீடியோவாக தனது யூடியூப் சேனலில் பதிவிடுவது வழக்கம். டிடிஎஃப் வாசனுக்கு 2கே கிட்ஸ் மத்தியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக பைக்குகளை இயக்குகிறார் என ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. போக்குவரத்து விதிகளில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து அபராத தொகையை பலமடங்காக அதிகரித்து பல ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தாலும் அதில் இருந்தெல்லாம் எஸ்கேப் ஆகி, அதிவேக பயணம் மேற்கொண்டு வீடியோ பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார் வாசன்.
டிடிஎஃப் வாசன், அனுமதியின்றி கூட்டம் சேர்த்தது, ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டியது, அதிவேக பயணம் என ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி, உதகையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஆயிரம் ரூபாய் அபராத விதித்து புதுமந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பாதையில் குறிப்பிட்ட அளவை விட அதிவேகமாக தனது பைக்கில் சென்றுள்ளார் டிடிஎஃப் வாசன். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் அவரை நிறுத்த முற்பட்டுள்ளனர். அப்போது நிற்காமல் சென்றுள்ளார் வாசன்.
இதையடுத்து அவர்கள் ரோந்து பணியில் இருந்த புதுமந்து காவல் துறையினருக்கு இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டிடிஎப் வாசனை மடக்கிப் பிடித்த புதுமந்து போலீசார் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications