ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல நாளை முதல் கட்டுப்பாடு! இன்று முதல் இபாஸுக்கான பதிவு தொடங்கியது!
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல நாளை முதல் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இன்று முதல் பொதுமக்கள் இ பாஸை பெற பதிவு செய்யலாம். காலை 6 மணி முதல் அதற்கான பணிகள் துவங்கின.
தமிழகத்தில் முக்கியமான கோடை வாசஸ்தலமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்டவை உள்ளன. இங்கு ஆண்டுதோறும் கோடையை குளுமையாக்க மக்கள் சென்று வருகிறார்கள்.

கோடை என்றில்லை தொடர் விடுமுறை வந்தாலும் சரி வண்டியை எடுத்துக் கொண்டு ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ செல்கிறார்கள். இதனால் ஊட்டி, கொடைக்கானல் சாலைகளில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. கிடைக்கும் விடுப்பு இதிலேயே முடிந்துவிடும் போல் இருந்தது. இந்த நிலையில்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த கொரோனா காலத்தில் இருந்தது போல் இ பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 7ஆம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இ பாஸ் முறையை கொண்டு வருவதற்கான பணிகளை ஊட்டி, கொடைக்கானல் மாவட்ட நிர்வாகம் எடுத்து வந்தது.

இந்த நிலையில்தான் ஊட்டி செல்ல இ பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை நீலகிரி ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். epass.tnega.org என்ற இணையதளம் வாயிலாக இ பாஸுக்கு இன்று காலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதற்கான பணிகள் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது. எனவே நாளை முதல் இந்த இணையதள முகவரி மூலம் இ பாஸுக்காக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி செல்ல இ பாஸ் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டன. அது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு இ பாஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவாக உள்ளது.
மேலும் இ பாஸுக்கு என்று வழிகாட்டுதல்களை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் டிஎன்ஈஜிஏ-வுடன் இணைந்து ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா, வணிகம், தொழில்துறை சார்ந்து வாகனங்களில் வருபவர்கள் இந்த இ பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இப்படி விண்ணப்பிக்கும் போது ஒரு கியூ ஆர் கோட் ஜெனரேட் ஆகும். அதை ஊட்டியில் சோதனையில் உள்ள அதிகாரிகள் பரிசோதித்து வாகனங்களை அனுமதிப்பர். இந்த இ பாஸ் நடைமுறையை பெறுவது மிகவும் எளிது. எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை ஊட்டியில் இருக்க போகிறீர்கள், எந்த இடத்தில் தங்க போகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். பயணிக்கும் வாகனமும் காரா, பஸ்ஸா, வேனா என்பதையும் வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்ய உள்ளனர்கள் என்பதையும் குறிப்பிட்டால் போதும் இ பாஸ் ஜெனரேட் ஆகிவிடும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும். இந்த இ பாஸ் நடைமுறையில் எடுத்துக் கொள்ளப்படாது. ஒவ்வொரு வாகனங்களுக்கு வரும் இ பாஸ் பதிவு மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களுக்கும் இ பாஸ் வழங்கப்படும். ஊட்டிக்கு வருவோர் இ பாஸை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது.
பஸ்களில் வருவோருக்கு இ பாஸ் தேவையில்லை, அது போல் நீலகிரி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் தேவையில்லை. மேலும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊட்டியில் வசிக்கலாம். அவர்கள் வேறு பதிவெண் கொண்ட வாகனங்களை ஊட்டியில் பயன்படுத்தலாம். இந்த இ பாஸ் நடைமுறை நாளை (மே 7) முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை பின்பற்றப்படும்.
வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இமெயில் முகவரி மூலம் இபாஸ் பெற விண்ணப்பிக்கலாம். அது போல் கொடைக்கானல் செல்வதற்கான இ பாஸ் பெறுவதற்கான பதிவும் இன்று தொடங்கியது. இபாஸ் பெற epass.tnega.org/home என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
அதில் நீங்கள் செல்ல விரும்பும் இடம் என்ற இடத்தில் நீலகிரி, கொடைக்கானல் என இரு இடங்கள் இருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். வெளிமாவட்ட , வெளிமாநில வாகனங்களுக்கு இ பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications