‛ஸ்டாலின் பாணி’.. வெயிலில் தப்பிக்க வேறு வழி இல்லை.. தேர்தல் முடிந்ததுமே ஊட்டிக்கு வந்த சித்தராமையா
நீலகிரி: முதல்வர் ஸ்டாலின் பாணியில் லோக்சபா தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார். இன்று முதல் 3 நாட்கள் முதல்வர் சித்தராமையாக ஊட்டியில் குடும்பத்துடன் நேரம் செலவிட உள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். அங்கு மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி முதற்கட்டமாக கடந்த மாதம் 26 ம் தேதி 14 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. அதன்பிறகு இன்று மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த லோக்சபா தேர்தலையொட்டி முதல்வர் சித்தராமையாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை 10க்கும் அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சித்தராமையாக வாகன பேரணி, ஊர்வலம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.
இந்நிலையில் தான் இன்று கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் சித்தராமையா ஓய்வெடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் தனது குடும்பத்துடன் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். பெங்களூரை ஒப்பிடும்போது ஊட்டி குளிர்பிரதேசமாக உள்ளது. இதனால் தான் சித்தராமையாக ஊட்டியை தேர்வு செய்து ஓய்வுக்காக வந்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வுக்காக குளிர் பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஓய்வு எடுத்தார். அதன்பிறகு அவர் சென்னை திரும்பினார்.
அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்று திரும்பினார். அந்த வகையில் கர்நாடகாவில் தேர்தல் முடிந்த நிலையில் சித்தராமையா தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளது ஓய்வெடுப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications