அதிமுக புள்ளிக்கும் தொடர்புண்டு.. கொடநாடு வழக்கில் சயானின் வாக்குமூலம்.. இன்று விசாரணை, நேரில் ஆஜர்
கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
நீலகிரி: கொடநாடு வழக்கு தொடர்பாக, அதிமுக புள்ளிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக சயான் அளித்த வாக்குமூலம் இன்றைய தினம் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது.. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று விசாரணை நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!
கடந்த சில தினங்களாகவே கொடநாடு பங்களா விவகாரம் சூடுபிடித்துள்ளது.. இந்த பங்களாவின் கொலை, கொள்ளை வழக்கை போலீசார் மறுபடியும் விசாரிப்பதால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருபக்கம் திமுக இது சம்பந்தமான விவகாரத்தை கிளப்பி உள்ளது.. தேர்தல் பிரச்சாரங்களில் சொன்னதைபோலவே இது தொடர்பான கேள்விகளையும் கேட்டு வருகிறது.. குறிப்பாக தமிழக காங்கிரஸ், அதிமுகவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறது.. ஆனால், அதிமுகவோ அலறி கிடக்கிறது.

அதிமுக
எடப்பாடி பழனிசாமியின் பெயர் இதில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டதில் இருந்தே, அதிமுக மேலிடம் கலங்கி உள்ளது.. இது தொடர்பான விவாதங்களும் சோஷியல் மீடியாவில் தினமும் எழுந்தபடியே உள்ளன. மற்றொரு புறம், சட்டரீதியான நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கின்றன.. இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக போலீசார் கோர்ட்டின் அனுமதி பெற்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்...

சயான்
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், இப்போதைக்கு நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் தங்கியிருக்கிறார். அவரை மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர்... அதனால், கடந்த கடந்த 17-ந் தேதி ஊட்டியில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார்... அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு
அப்போது, கொடநாடு வழக்கில் அதிமுக முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக சயான் தெரிவித்ததாக கூறப்படுகிறது... அதுமட்டுமல்ல, மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சயான் அப்போது போலீசாரிடம் தெரிவித்துள்ளார்... அந்த விவரங்களை எல்6லாம் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

தனபால்
அதேபோல, தனபால் என்பவருக்கும் போலீசார் அனுப்பினர்.. ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலம் கனகராஜின் அண்ணன்தான் தனபால்.. கொடநாடு வழக்கில் தேடப்பட்ட கனகராஜும் விபத்து ஒன்றில் இறந்திருந்த நிலையில், தன்னுடைய தம்பியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்னார் தனபால்.. அதனால்தான் அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. தனபாலும் ஊட்டிக்கு வந்து விசாரணையில் ஆஜரானார்.. ஒரு மணி நேரம் தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.. தம்பியை திட்டமிட்டே கொன்றுவிட்டதாக தனபால் வாக்குமூலம் தந்தார்.

தாக்கல்
ஆக, சயான் மற்றும் தனபால் இருவரிடமும் வாக்குமூலம் பெற்று போலீசார் வைத்துள்ளனர்.. இந்த வழக்குதான் இன்றைய தேதி நீலகிரி மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது... இன்றைய தினம், சயான், தனபால் இருவரும் அளித்த வாக்குமூலம் விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.. அப்போது அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..

மனு
அதுமட்டுமல்ல, வழக்கின் சாட்சிகளில் ஒருவரான கோவையைச் சேர்ந்த ரவி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் இந்த வழக்கு தொடர்பாக தனக்கு மிரட்டல் வருவதாகவும், எனவே போலீஸ் மறுவிசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுத்திருந்தார்.. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "அரசு தரப்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்படும்... யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது நோக்கமல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது...
Recommended Video

தீர்ப்பு
இதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதி அதாவது இன்றைய தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.இந்த தீர்ப்பும் இன்றுதான் வருகிறது.. அதிமுக புள்ளிகள் சிலர் மீது, சயான் குற்றச்சாட்டை கூறி வாக்குமூலம் தந்திருந்த நிலையில், இது தொடர்பான வழக்கும் இன்றுதான் விசாரணைக்கு வருகிறது.. இந்த வழக்குகள் விசாரணை தமிழக அரசியலில் பரபரப்பையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் கூட்டி வருகிறது..
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications