குன்னூர் பிரபல வில்லா ரெஸ்டாரண்ட் சாஸில் நெளிந்த புழுக்கள்! வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிகில் பட நடிகர்
ஊட்டி: நீலகிரி மாவட்டம், குன்னூரில் வில்லாவில் இருந்த உணவகம் ஒன்றில் தக்காளி சாஸில் புழுக்கள் நெளிந்த நிலையில் இருந்ததால் அதை பார்த்து துணை நடிகர் விஜய் விஸ்வா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிகில், மாயநதி, சாயம், உட்பட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் விஜய் விஸ்வா என்ற அபி சரவணன், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

இவர்கள் குன்னூரில் டேன்டீ தலைமை அலுவலகம் அருகே உள்ள வில்லா ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளனர். அப்போது ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்து உணவு அருந்தியுள்ளனர். அதனுடன் தக்காளி சாஸ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை அனைவரும் பயன்படுத்திய போது ஒருவருக்கு அந்த சாஸில் இருந்து துர்நாற்றம் வீசுவது போல் இருந்ததால் அந்த சாஸ் இருந்த டப்பாவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஹோட்டல் நிர்வாகத்திடம் விஜய் விஸ்வா நியாயம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அதற்கான உரிய பதில்களை அளிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் விஸ்வா தரப்பினர் உணவு பாதுகாப்பு துறைக்கு போன் செய்த போதும் அழைப்பை யாரும் எடுக்காத நிலையில், 108 ஆம்புலன்ஸுக்கும் போன் செய்தும், போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஓட்டல் நிர்வாகத்தினர் அங்கு வந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டனர்.
இதுகுறித்து துணை நடிகர் விஜய் விஸ்வா கூறுகையில், இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்தனர். இங்கு தங்க வேண்டாம் என முடிவு செய்து உணவு மட்டும் அருந்த முடிவு செய்தோம். ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்தபோது அதில் வைக்கப்பட்ட சாஸில் ஒரு வித துர்நாற்றம் வீசியது.
அதைத் திறந்து பார்த்தபோது அதில் புழுக்கள் இருந்தன. இதனால் நாங்கள் உண்பதை உடனடியாக நிறுத்திவிட்டு அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் கேட்டபோது சரியான உரிய பதில் அளிக்கவில்லை. இந்த சாஸை சாப்பிட்டதால் இருவருக்கு வாந்தி ஏற்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முயன்றோம்.
ஆனால் லைன் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரமாக காத்திருந்தும் தண்ணீர் கூட கொடுக்கவில்லை. இறுதி வரை நுழைவாயில் அருகே நிற்க வைத்து விட்டனர். இந்த உயர் தர ஓட்டலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்கின்றனர்.
இதுபோன்ற சாஸ் பாக்கெட்டுகளை சோதித்த பின்பு உட்கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஓட்டல் மேலாளர் டொமினிக் சேவியர் கூறுகையில், இன்று எங்கள் ஓட்டலுக்கு விருந்தினர்கள் வந்திருந்தனர். டொமேட்டோ சாஸில் புழுக்கள் இருப்பதாக தெரிவித்தனர். அது எங்களுடைய உற்பத்தி கிடையாது. மார்க்கெட்டிலிருந்து சாஸை வாங்குகிறோம். வாடிக்கையாளர்களிடம் ஓட்டல் தரப்பில் மன்னிப்பை கேட்டோம் என்றார்.
மேலும் இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இச்சம்பவம் தொடர்பாக குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பி உள்ளனர். சம்மந்தப்பட்ட தனியார் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications