வருமானவரி பாக்கி.. திமுக ஆ ராசாவின் சொத்து மதிப்பு வெறும் ரூ.3.73 கோடி தான்! கடன் எவ்வளவு தெரியுமா
நீலகிரி: வரும் லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் சிட்டிங் எம்பியான ஆ ராசா மீண்டும் போட்டியிடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு, கடன் விபரங்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதியின் எம்பியாக இருப்பவர் ஆ ராசா. முன்னாள் மத்திய அமைச்சரான இவர் மீண்டும் வரும் லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் களமிறங்கி உள்ளார். இதன்மூலம் நீலகிரி தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை ஆ ராசா நேற்று தாக்கல் செய்தார். நேற்று தான் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாக இருந்தது. இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் சரியான விபரங்களுடன் இருக்கும் பட்சத்தில் தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்படும். இல்லாவிட்டால் நிராகரிப்பு செய்யப்படும்.
இத்தகைய சூழலில் தான் நீலகிரி திமுக வேட்பாளர் ஆ ராசாவின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள பிரமாணப்பத்திரத்தில் ஆ ராசா தனது பெயரிலான சொத்துகள், கடன், முதலீடுகள் குறித்த விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:
ஆ ராசா தனது பிரமாணப்பத்திரத்தில் கையில் ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரொக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வங்கி சேமிப்பாக ரூ.86.14 லட்சம் உள்ளது. வங்கி பத்திரங்கள் மூலம் ரூ.19.91 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ரூ.12 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளார். Toyota Corolla Altis கார் உள்ளது. ரூ.52.63 லட்சம் மதிப்பிலான 108 சவரண் நகைகளை வைத்துள்ளார்.
மேலும் ஆ ராசா ரூ.3.34 லட்சம் மதிப்பிலான 4 கிலோ 182 கிராம் வெள்ளி பொருட்கள் வைத்துள்ளார். இப்படியாக மொத்தம் ரூ.3.73 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் ஆ ராசாவிடம் உள்ளது. அசையா சொத்துகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள ஆ ராசா வருமான வரியில் ரூ.25.22 லட்சம் பாக்கி வைத்துள்ளார். மேலும் ரூ.19 லட்சம் கடன் உள்ளது என ஆ ராசா தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications