நீலகிரிக்கு வந்த விசித்திர விருந்தாளி.. இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை.. அதிர்ந்து போன மக்கள்
நீலகிரி: நீலகிரிக்கு வித்தியாசமான ஆந்தை ஒன்று வருகை புரிந்தது மக்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
வட அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நீண்ட காது ஆந்தை (Asio otus), தென்னிந்தியாவில் நீலகிரி காட்டு பகுதிக்கு முதல்முறையாக வந்தது. நீலகிரியில் திடீரென அந்த மர்மமான ஆந்தை கண்டறியப்பட்டது பறவையியலாளர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோத்தகிரி மலையில் சுற்றுலா பயணத்தின் போது பறவை ஆர்வலரான என் கண்ணன் என்பவர் இந்தப் பறவையை முதல்முறையாக கண்டறிந்துள்ளார். அங்கே இருக்கும் மரம் ஒன்றில் இந்த பறவையை அவர் கண்டறிந்துள்ளார். அங்கே மரங்களுக்கு இடையே இந்த ஆந்தை இங்கும் அங்குமாக பறந்துள்ளது.
நீண்ட காதுகள் கொண்ட இந்த ஆந்தை ஒரு வடக்கு அரைக்கோளப் பகுதியில் வாழும் பறவையாகும், இது பொதுவாக வட அமெரிக்கா மற்றும் யூரேசியா பகுதிகளில் வாழும் பறவையாகும். நீண்ட காதுகள் கொண்ட இந்த ஆந்தைகள் முன்பு வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, அசோர்ஸ் மற்றும் கேனரி தீவுகளில் காணப்பட்டன.
தற்போது இவை திடீரென நீலகிரிக்கு வந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதற்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.
ஐநாவும் இந்த காலநிலை மாற்றம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. அந்த அளவிற்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.
இதில் பறவைகள், மீன்கள் இடப்பெயர்வு அதிக அளவில் இருக்கும் என்றும் ஐநா கூறி உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது நீண்ட காதுகள் கொண்ட அந்த ஆந்தைகள் வந்துள்ளன. வடஇந்தியாவில் ஒன்று இரண்டு எண்ணிக்கையில் காணப்படும் இந்த ஆந்தைகள் தற்போது தென்னிந்தியாவில் முதல்முறை கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு தென்னிந்திய மாநிலங்களில் நீண்ட காதுகள் கொண்ட ஆந்தையைப் பார்த்ததாக எந்தப் பதிவும் இல்லாததால், பதிவு செய்யப்பட்ட முதல் நீண்ட காதுகள் கொண்ட பறவை இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக வெப்பம் குறைந்த இடங்களுக்கு பறவைகள் பறக்கும் வாய்ப்புகள் உள்ளன. நீலகிரியில் வெப்பம் குறைவாக இருப்பதாலும், வானிலை காரணமாகவும் பறவைகள் வந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சென்னை கடல்: பறவைகள் போலவே கடல் உயிரினங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர தொடங்கி உள்ளன. சென்னையை சுற்றி சுற்றி பல்வேறு கடற்கரைகள் இருக்கின்றன. இதில் சில மெரினா, பெஸ்ஸி போன்ற கடற்கரைகள் அதிக மக்கள் செல்லும் இடங்களாக உள்ளன. இந்த கடல் பகுதிகள் அசுத்தமாக இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்படும். இருந்தாலும் இந்த கடல் பகுதிகளை பாதுகாக்க, இங்கே இருக்கும் மீன் வளங்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்த பேமஸான கடற்கரைகள் போக மற்ற சில கடற்கரைகளுக்கு மக்கள் அதிகமாக செல்ல மாட்டார்கள். மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் செல்வார்கள். அதில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் போன்ற கடற்கரைகள் மக்கள் குறைவாக செல்லும் கடற்கரைகள் ஆகும். சமீபத்தில்தான் சென்னையில் நீலாங்கரை கடலுக்கு நடுவே டால்பின்கள் தோன்றி உள்ளன. ஒன்று, இரண்டு என்று இல்லாமல் கூட்டம் கூட்டமாக 10க்கும் மேற்பட்ட டால்பின்கள் இங்கே வந்துள்ளன. கடல் கரைக்கு அருகே நீச்சல் போட்டுவிட்டு அதன்பின் மீண்டும் சென்றுள்ளன.
சென்னை கடற்கரை பகுதியில் டால்பின்கள் கடந்த 6 மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் தோன்றி உள்ளன. சமீபத்தில் ஈச்சம்பாக்கம் கடற்கரையில் டால்பின்கள் தோன்றியது குறிப்பிடத்தக்கது. நேற்று நீலாங்கரையில் தோன்றிய டால்பின்களை மக்கள் பலர் ஆங்காங்கே பார்த்துள்ளனர். சென்னையில் பொதுவாக டால்பின்களை பார்ப்பது அரிது. டால்பின்கள் மிகவும் சுத்தமான கடல் நீர் பகுதியை விரும்ப கூடியவை. அந்த வகையில் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் டால்பின்கள் தென்படுவது ஒரு வகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.
கடல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக அங்கு டால்பின்கள் தோன்றி உள்ளன. அதிக கப்பல் போக்குவரத்து, படகு போக்குவரத்து இருக்கும் இடங்களில் டால்பின்களை பார்ப்பது கடினம். அதேபோல் அதிக வெப்பம் உள்ள கடல் பகுதிகளிலும் டால்பின்களை பார்ப்பது அரிது. சென்னையில் அவ்வப்போது டால்பின்கள் அரிதாக தோன்றுவது வழக்கம். இதற்கு முன் 2021ல் ஒரு முறை சென்னையில் பல்வேறு பீச்களில் டால்பின்கள் தோன்றின என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications