நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரைமிங், டைமிங்...., எப்பவுமே ஸ்டாலின் இப்படித்தான் மோடி- எடப்பாடியை கலாய்க்கிறார்!

Google Oneindia Tamil News

மேட்டுப்பாளையம்: மத்தியிலே பாசிச ஆட்சியும், மாநிலத்தில் எடுபிடி ஆட்சியும் நடந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியையும், முதல்வர் பழனிச்சாமியையும் ஒரே மாதிரியாக கலாய்த்து ஸ்டாலின் திட்டி வருகிறார். அவர் பேசும் முக்கியமான பேச்சான, மத்தியிலே பாசிச ஆட்சியும், மாநிலத்தில் எடுபிடி ஆட்சியும் நடந்து கொண்டிருப்பதாக கூறுவார். அதை மறக்காமல் இன்றும் ஸ்டாலின் கூறினார்.

mk stalin accuses pm modi and cm edappadi palanisamy over rule issue

சரி ஒகே, இனி ஸ்டாலின் இன்றைக்க சொன்ன முக்கியமான விஷயங்களை பார்த்துவிடுவோம். "பாட்டாளிகளின் கையில் செல்போன்களை தவழ செய்தவர் ஆ.ராசா. அப்படித் தவழ வைத்த காரணத்தால் சில எதிரிகளையும் அவர் சம்பாதித்தார். தொலைத்தொடர்பில் சில நிறுவனங்களின் ஏதேச்சிகார அதிகாரத்தை ராசா சுக்குநூறாக உடைத்துள்ளார். அதனால் அவர் மீது ஒரு மிகப்பெரிய வீண் பழியை போட்டார்கள். ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கிலே சிறை செய்து சிக்க வைத்தார்கள்.

கனிமொழியை தோற்கடியுங்கள்.. தூத்துக்குடியில் அமித்ஷா ஆவேச பிரச்சாரம்கனிமொழியை தோற்கடியுங்கள்.. தூத்துக்குடியில் அமித்ஷா ஆவேச பிரச்சாரம்

அந்த சோதனையிலே மத்திய அமைச்சராக இருந்த அவர், பதவி விலக வேண்டிய சூழல் வந்துச்சு. அதற்காக திமுக தலைவர் கருணாநிதி மிகமிக வருந்தினார். எங்களை போன்றவர்களை அழைத்து விவாதித்தார். மிக இருக்கமான அந்த மனநிலையில், ராசாவிடம் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அவர் கூறினார். தலைவர் கருணாநிதியின் பேச்சை கேட்டு ராசா விலகி இருந்தார். இப்போது அந்த ஊழலே நடக்கவில்லை என்று வந்துவிட்டது" இவ்வாறு ராசா குறித்து ஸ்டாலின் கூறினார்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலை குற்றச்சாட்டு, கொடநாடு கொலை விவகாரம் குறித்து ஸ்டாலின் விளக்கமாக பேசினார். அவரது பேச்சில் பல இடங்களில் முதல்வர் பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார்.

English summary
dmk leader mk stalin accuses pm modi and cm edappadi palanisamy over rule issue, he accuses same words against pm modi and cm edappadi last few campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X