பிரதமர் மோடியின் நீலகிரி வருகை: முதுமலை புலிகள் காப்பகம் இன்று முதல் 4 நாட்கள் மூடப்படுகிறது
நீலகிரி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, இன்று முதல் வருகிற 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், ஓய்வு விடுதிகள், உணவகங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும், வாகன சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது சமீபத்தில் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.
அதேபோல, வருகிற 9-ந் தேதி புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.. அதாவது, புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நீலகிரி மாவட்டத்துக்கு வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி வருகை தர போவதாக தகவல் வெளியாகியுள்ளது... பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர், தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடுக்கு வருகை தர உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் டெல்லியில் அறிவித்துள்ளார்..
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு பிரதமர் மோடி வரும் 9-ம் தேதி வருகிறார். அங்கிருந்து, முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், வயநாட்டில் உள்ள புலிகள் காப்பகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து அவர்களை பாராட்ட உள்ளதாகவும், பின்னர் கேரளாவில் உள்ள வயநாடு சரணாலயத்துக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.. பிரதமர் வருவதாக வெளியான தகவலையடுத்து, முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது..
யானைபாடி, லைட்பாடி, தெக்குபாடி ஆகிய பழங்குடியின கிராமங்களில் நடைபாதை அமைப்பது, வீடுகள், கழிப்பறைகளை சீரமைத்து பெயிண்ட் பூசுவது போன்ற பணிகளும் வேகம் எடுத்துள்ளன. பாகன் பொம்மன், பெள்ளி தம்பதி வீடு, அதை சுற்றியுள்ள வீடுகளும் சீரமைக்கப்படுகின்றன. மசினகுடியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இதனிடையே, பிரதமர் மோடி வருகையையொட்டி, இன்று முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக புலிகள் காப்பகம் மூடப்படுவதாக காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன், வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் உள்ளிட்டவையும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மூடப்படுகின்றன என்றும், வன விலங்குகளை பார்ப்பதற்கான வாகன சவாரி, 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தற்காலிக நிறுத்தப்படுகிறது என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது..
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications