நிர்மலா சீதாராமன் பேசுவது போல ஏ.ஐ. வீடியோ.. பல லட்சங்களை இழந்த நீலகிரி தொழிலதிபர்கள்
ஊட்டி: இன்று ஏஐ தொழில் நுட்பம் தத்ரூபமாக வளர்ந்து நிற்கிறது. ஒரிஜினல் எது, போலி என்று தெரியாத அளவிற்கு ஏஐ வளர்ந்துவிட்டதால், கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதாக இருக்கிறது. இதனை உணராமல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற ஏ.ஐ. வீடியோவை நம்பி, நீலகிரி தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல் வீடியோக்களை அனுப்பி தொழில் அதிபர்களை ஏமாற்றும் கும்பல் அதிகரித்து வருகிறது. இதில் முதலீடு செய்தால் லாபம், அதில் முதலீடு செய்தால் லாபம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல் வீடியோ அனுப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள். அதனை அப்படியே நம்பி தொழில் அதிபர்கள் ஏமாந்து விடுகிறார்கள். அப்படித்தான் நீலகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 55 வயதான தொழிலதிபர், தேயிலை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல போலியாக தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வீடியோ அனுப்பப்பட்டுள்ளது.
அதில், குறிப்பிட்ட செயலியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல், நம்பிய தொழிலதிபர், குறிப்பிட்ட இணையதள முகவரியில் சென்று தனது விவரங்களை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு அழைப்பு வந்திருக்கிறது. அப்போது பேசிய நபர்கள், செயலி மூலம் முதலீடு செய்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார்களாம்.
இதையடுத்து கோத்தகிரி தொழிலதிபர் முதல் கட்டமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்தார். அப்போது அவருக்கு லாபமாக ரூ.47 ஆயிரம் வந்துள்ளது. இதை நம்பிய அவர், கூடுதலாக பணம் முதலீடு செய்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த பணத்தை எடுப்பதற்கு பல்வேறு காரணங்களை கூறி அவர்கள் கூடுதல் பணம் முதலீடு செய்ய வைத்தனர்.
மொத்தம் ரூ.7 லட்சம் முதலீடு செய்த பின்னர், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஆசாமிகளிடம் பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து உடனடியாக அவர்கள் அழைப்பை துண்டித்து விட்டார்கள். இதன் பின்னர் தொழிலதிபரால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நீலகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நீலகிரியை சேர்ந்த 60 வயதான மற்றொரு தொழிலதிபரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் முகநூல் மூலம் வந்த போலி வீடியோவை நம்பி ரூ.10 லட்சம் முதலீடு செய்து மோசடி ஆசாமிகளிடம் பணத்தை இழந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பணம் அனுப்பப்பட்ட குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணை முடக்கி நீலகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதாக வீடியோவை பார்த்து முதலீடு செய்ய வேண்டாம். நிதியமைச்சர் மட்டுமல்ல, நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என யார் பெயரில் வந்தாலும் முதலீடு செய்ய வேண்டாம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications