உனக்கு 16, எனக்கும் 16.. தங்க கம்மலை கழட்டி தந்த குன்னூர் பெண்.. யாரிந்த நீலகிரி பையன்? வந்தது வினை
ஊட்டி: தங்க கம்மல் காதில் அணிந்திருந்ததை பார்த்ததுமே, அதை வேண்டும் என்று காதலன் கேட்டுள்ளார்.. உடனடியாக கம்மலை கழட்டி தந்துள்ளார் மாணவி.. ஒருகட்டத்தில் கம்மலை திருப்பி கேட்க போய், இறுதியில் கதிகலங்கி போய்விட்டார் அந்த பரிதாப பெண்.. நீலகிரி மாவட்டம் குன்னுரில் அப்படி என்ன நடந்தது? யாரிந்த பெண்? ரீல்ஸ் மோகத்தில் சிக்கி இன்னும் எத்தனை பெண்கள் காவு வாங்கப்படுவோர்களோ தெரியவில்லை.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 16 வயது மாணவி, குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்... இந்த மாணவியின் அம்மா, வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.. எனவே, தந்தையின் பொறுப்பில் மாணவி வளர்ந்து வருகிறார்.

தினமும் பள்ளிக்கு, அப்பாவே அழைத்து சென்று வருவார்.. இந்த மாணவி செல்போனை அதிகமாக பயன்படுத்துவாராம்.. இதை கவனித்த அவரது அப்பா, பலமுறை மகளை கண்டித்திருக்கிறார்.. ஆனால், அப்பாவின் அட்வைஸ்களை காதில் வாங்கி கொள்ளாமல், செல்போனிலேயே மூழ்கி வந்துள்ளார்.. இதனால், படிப்பிலும் சரியாக கவனத்தை செலுத்தவில்லையாம்.
16 வயது சிறுவன் - சிறுமி
ஒருநாள், 16 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராமில் மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.. நாளடைவில் இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்திக்க துவங்கினார்கள்.. மாணவியின் அப்பாவும் வேலைக்கு சென்றுவிடுவதால், வீட்டிற்கு அந்த சிறுவனை வரவழைத்துள்ளார் சிறுமி.. இருவரும் பல நாட்கள் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
அப்படி உல்லாசமாக இருக்கும்போது, அதனை தன்னுடைய செல்போனில் சிறுவன் வீடியோ எடுத்து மகிழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பிறகு திடீரென ஒருநாள், தனக்கு சின்னதாக ஒரு கடன் இருப்பதால், பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.. இதைக்கேட்ட மாணவி, தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி உள்ளார். அதற்கு அந்த சிறுவன், காதில் உள்ள 3 பவுன் கம்மலை கழட்டி கொடு, அடுத்த வாரம் திருப்பி தந்துவிடுகிறேன் என்று கேட்டுள்ளார்.
முகம் மாறிய சிறுவன்
இதைக்கேட்டு மாணவி திடுக்கிட்டு, கம்மலை கழட்டி தர தயங்கியிருக்கிறார்.. ஆனால், சிறுவனின் வற்புறுத்தலால், கம்மலை கழட்டி தந்துள்ளார். அந்த சிறுவன் கம்மலை அடமானம் வைத்துவிட்டு, அந்த பணத்தில் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளான்..
பிறகு சில நாட்கள் கழித்து, "என் அம்மா ஊரிலிருந்து வருகிறார்.. காதில் கம்மல் எங்கே என்று கேட்பார். அதனால் உடனே கம்மலை திருப்பி தந்துவிடு என்று கேட்டுள்ளார்.. கம்மலை கேட்டதுமே சிறுவனின் முகம் மாறியது.. இதனால் இருவருக்குள்ளும் தகராறு வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சிறுவன், உல்லாசமாக இருந்த வீடியோவை மாணவியிடம் காண்பித்து, மிரட்டியிருக்கிறார்.
அதிர்ந்த பெற்றோர்
இந்நிலையில், வெளியூரிலிருந்து வீட்டுக்கு வந்த அம்மா, மாணவியின் காதில் கம்மல் இல்லாததை கவனித்து கேட்டுள்ளார்.. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த மாணவி, உண்மையை சொல்லிவிட்டார்..
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குன்னூர் மகளிர் போலீசில் புகார் தந்தனர்.. இப்போது அந்த சிறுவன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமி யாரிடமும் விஷயத்தை சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில், வீடியோ, உல்லாசம், கம்மல் என்று அடுத்தடுத்த தவறுகளை செய்த சிறுவன், இப்போது போலீசாரின் விசாரணை பிடியில் வசமாக சிக்கி உள்ளார்..
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications