நீலகிரியில் ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு.. ராட்சத பாறைகளை அகற்றும் பணிகள் தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. பர்லியார் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டு அரசு பேருந்து சிக்கியதில், அரசு பேருந்து ஓட்டுநர் ஜனகராஜ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது.

Nilgiris landslide ooty

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை பொழியும் என அறிவித்துள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டு அரசு பேருந்து சிக்கி மண்ணில் புதைந்ததில், அரசு பேருந்து ஓட்டுனர் ஜனகராஜ் உயிரிழந்தார். குன்னூர் பர்லியார் சாலையில் சாலை சீரமைப்புப் பணிகள் முடங்கின. ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மதிய வேளையில் கனமழை பெய்ததன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 15 வீடுகள் லேசான சேதமும், ஒரு குடியிருப்பு முழுமையாகவும் சேதமடைந்தது. 16 இடங்களில் தடுப்புச் சுவர்கள் இடிந்தன. நீலகிரியில் ஒரே நாளில் மொத்தம் 62 இடங்களில் சிறிதும், பெரிதுமாக மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு பகுதியில் சிக்கிய கேரள மாணவர்கள் 268 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊருகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. ஜேசிபி உட்பட 20-க்கும் மேற்பட்ட கனரக இயந்திரங்களைக் கொண்டு மண்குவியல் மற்றும் ராட்சதப் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+