நீலகிரி தொகுதியை எம்பி கோபாலகிருஷ்ணன் தக்க வைத்து கொள்வாரா?
நீலகிரி தொகுதியை எம்பி கோபாலகிருஷ்ணன் தக்க வைப்பாரா?
Recommended Video

சென்னை: சில எம்பி.க்கள் செயல் திட்டங்களை செய்து ஃபேமஸ் ஆவார்கள் என்றால் மாவட்டத்துக்கு எதுவுமே செய்யாமல் ஃபேமஸ் ஆனவர்தான் கோபாலகிருஷ்ணன். நீலகிரி அதிமுக எம்பிதான் கோபாலகிருஷ்ணன். நீலகிரி ஒரு தனித் தொகுதியாகும்.
கோபாலகிருஷ்ணன் இதற்கு முன் குன்னூர் நகராட்சி தலைவராக இருந்தவர். 56 வயதாகிறது. எம்ஏ., எம்ஃபில் படித்தவர். கடந்த 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஜெயிச்சதோடு சரி, தொகுதி பக்கம் இவர் வந்து 4 வருஷமாகிவிட்டது.
எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை, எந்த மக்கள் பிரச்சனையையும் இதுவரை கண்டு கொண்டதே இல்லை. இப்படி ஒரு எம்.பி., இருப்பது கூட மாவட்ட மக்களுக்கு சரிவர தெரியாது. இவர் தொகுதி பக்கம் எட்டிகூட பார்க்காததால், இவர் போட்டோவை போட்டு, "காணவில்லை" என்று போஸ்டர் கூட ஒட்டப்பட்டு அதுபெரிய சர்ச்சை கூட ஆனது.
வைரல் பேச்சு
அது மட்டும் இல்லை, இவர், தன் கட்சிக்காரர்களையே ஒருமையில் வசைபாடி, அசிங்க அசிங்கமாக திட்டியதுகூட வைரலானது. இதுவரை மாவட்ட வளர்ச்சிக்கு எதுவும் செய்யாவிட்டாலும், தற்போதுவரை இவர் குன்னூருக்கும் டெல்லிக்கும் பறந்தபடியேதான் இருப்பார்.

ஆ.ராசா
இத்தனைக்கும் இவர் 35 நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 73 சதவீதம் பாராளுமன்றத்தில் வருகை வைத்துள்ளார். இந்த தொகுதியில் இவர் யாரை எதிர்த்து இங்கு போட்டியிட்டார் தெரியுமா? திமுகவின் ஆ.ராசாவை எதிர்த்துதான்.

வாக்கு வித்தியாசம்
2014 நிலவரப்படி நீலகிரி லோக்சபா தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 12,69,163 ஆகும். இதில் 74 சதவீத வாக்குகளை பெற்றவர் கோபாலகிருஷ்ணன். இவருக்கு கிடைத்த வாக்குகள் 9,33,076 வாக்குகள். ஆ. ராசா 3,58,760 ஓட்டுகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். ஆ.ராசாவைவிட 1,04,940 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றார் கோபாலகிருஷ்ணன்.

பலவீனமான சூழல்
எம்பி ஆனதில் இருந்தே நீலகிரி மாவட்டத்தில் நிறைய அதிருப்தியை இவர் சம்பாதித்துவிட்டதால், வரப்போகிற தேர்தலில் இவரே வெற்றி பெறுவாரா? அல்லது திமுகவுக்கே அது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெரிய அளவில் தொகுதிக்கு எதுவும் செய்யாத நிலையில் தற்போது அதிமுகவும் பலவீனமாக இருக்கும் சூழலில்.. இங்கு யாரை நிறுத்தினாலும் அதிமுகவுக்கு நிச்சயம் மூச்சுத் திணறும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications