ஓடும் காரில் ஊட்டி பெண்ணுக்கு தாலி கட்டிய நீலகிரி ஹீரோ.. உடனே பெரிய ட்விஸ்ட்.. போலீஸே எதிர்பார்க்கல
ஊட்டி: பெண்ணை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்வது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவடு, வலுக்கட்டாயமாக தாலி கட்டுவது என அதிர்ச்சி சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.. அப்படித்தான் நேற்றைய தினமும் சத்தியமங்கலத்தில் ஒரு கடத்தல் சம்பவம் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. யாரிந்த பெண்? விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் என்ன? சுருக்கமாக பார்ப்போம்.
சமீபத்தில் மயிலாடுதுறையில் ஒரு கடத்தல் சம்பவம் நடந்தது.. விக்னேஸ்வரன் என்பவர், இளம்பெண்ணை, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து காரில் வைத்து கடத்தினார்..

காதலன் தன்னுடைய நண்பர்கள் 14 பேரை அழைத்து கொண்டு, பயங்கர ஆயுதங்களை கார்கள், பைக்குகளில் போட்டுக் கொண்டு, சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு கிளம்பினார்.. பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அவரை காரில் கடத்தினார்கள்..
ஓடும் காரில் தாலி கட்டி
அந்த பெண் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கத்தி கூச்சலிட்ட நிலையில், உடனே அவரது வாயை பொத்திவிட்டு, வேகமாக காரை ஓட்டிச்சென்றனர். அப்போது விக்னேஸ்வரன் அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், என் வாழ்க்கையையே இப்படி பாழக்கிட்டியே என்று தலையில் அடித்து கொண்டு அழுதார்..
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்திலும் அப்போது பரவியது.. இதை கண்ட மயிலாடுதுறை போலீசார், உடனே சம்பந்தப்பட்டவர்களை விரட்டி சென்றனர்.. ஆனால் வழியிலேயே விக்னேஸ்வரனுடன் வந்த 12 பேரும் தப்பி விட்டனர்... மிச்சம் 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்திருந்தது நினைவிருக்கலாம்.
நீலகிரி ஊட்டி பெண்
இதோ இப்போது நீலகிரி பெண்ணுக்கும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோலூர்மட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் மகேஸ்வரி.. இவருக்கு 20 வயதாகிறது.. இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற 25 வயது நபரை காதலித்து வந்திருக்கிறார்கள்..
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சோலூர்மட்டம் போலீஸில் புகார் தந்திருந்தனர்.. உடனே போலீசாரும் இரு வீட்டு பெற்றோர்களை அழைத்து பேசினார்கள்.. அப்போது மகேஸ்வரி மீண்டும் மனது மாறி தன்னுடைய பெற்றோருடன் செல்ல சம்மதித்தார்.
மகேஸ்வரிக்கு தாலி கட்டி
இதையடுத்து அவரது பெற்றோர் தாளவாடியில் உள்ள உறவினர் வீட்டில் மகேஸ்வரியை தங்க வைத்தனர்.. நாட்கள் செல்ல செல்ல மகேஸ்வரியும் காதலனை மறக்க துவங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று, தாளவாடியில் இருந்த மகேஸ்வரியை அவரது தந்தை ஊருக்கு அழைத்து செல்வதாக நேற்று காலை பண்ணாரி அம்மன் கோயில் பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது மகேஸ்வரியிடம் கார் ஒன்று திடீரென நெருங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்து இறங்கியவர்கள் மகேஸ்வரியை இழுத்து உள்ளே தள்ளி விட்டு வேகமாக புறப்பட்டனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் உடனடியாக காரை துரத்தினார்கள்..
புது குய்யனூர் அருகே காரை தடுத்து நிறுத்திய போது காரை ஒட்டிச்சென்ற நபர் மரத்தில் மோதி நிறுத்தினார்... இதனால் சம்பவ இடமே ஒரு கணம் பதற்றத்தில் மூழ்கியது. ஆத்திரமடைந்த அங்கிருந்த பொதுமக்கள், காரில் இருந்தவர்களை பிடித்து தாக்கினார்கள்.. அதற்குள் தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்..
விசாரணையில் ட்விஸ்ட்
அப்போதுதான் விசாரணையில் பல தகவல்கள் வெளியாயின,.. அதாவது இந்த கடத்தல் நாடகத்தை நடத்த சொன்னதே மகேஸ்வரிதானாம்..
தாளவாடியில் இருந்து ஊருக்கு செல்லும் தகவலை மணிகண்டனுக்கு செல்போன் மூலம் சொல்லியிருக்கிறார்.. பண்ணாரி அருகே அப்பாவுடன் நின்றிருக்கும்போது, தன்னை காரில் வைத்து கடத்தும்படி சொன்னாராம்.. அன்படியே மகேஸ்வரியை மணிகண்டன் காரில் கடத்தி, அவருக்கு காரிலேயே தாலி கட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மகேஸ்வரி, தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, தன்னுடைய காதலனுடன் செல்ல விரும்புவதாக போலீசாரிடம் சொன்னார்.. பிறகு போலீசாரும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இந்த கடத்தல் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது..
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications