இம்முறையும் ஊட்டி மலர் கண்காட்சி ரத்து.. வீட்டிலிருந்தே மலர் அலங்காரங்களை ஆன்லைன் மூலம் காண ஏற்பாடு
ஊட்டி மலர்க்கண்காட்சி இந்த முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது
ஊட்டி: தொற்று பரவல் அதிகமாக இருக்கவும், 2-வது ஆண்டாக ஊட்டியில் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், அங்கு செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சிக்கான 293 ரகங்களை சேர்ந்த 5 லட்சம் செடிகள் நடவு செய்யப்பட்டதோடு, 25 ஆயிரம் பூந்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இதை ஆன்லைனில் பார்வையிட வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டியில் எப்போதுமே வருடந்தோறும் மலர்க்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.. இதை காண வெளிநாடு, உள்நாடு, பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் ஊட்டிக்கு சீசனில் குவிவது வழக்கம்.

அலங்காரங்கள்
ஆனால், கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கவும், முழு லாக்டவுடன் போடப்பட்டுவிட்டது.. இதனால், சீசனில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.. எனவே இந்த வருடமாவது மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதனால், கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தயாரானது.. மலர்கள் வைத்து அலங்காரங்கள் செய்யும் பணியும் துவங்கியது..

ரத்து
ஆனால், இப்போதும் பரவல் அதிகமாக இருக்கவும், 2-வது ஆண்டாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், அங்கு செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கூகுள் டிரைவில் தாவரவியல் பூங்கா-2021 என உள்ளீடு செய்து ட்ரோன் கேமரா மூலம் பூங்காவின் இயற்கை எழில் மிகுந்த காட்சி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மலர் அலங்காரம், கண்ணாடி மாளிகை போன்றவற்றை 5 நிமிட வீடியோவாக பார்க்கலாம்.

மலர்க்கண்காட்சி
இதற்கான திட்டத்தை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சிக்கான 293 ரகங்களை சேர்ந்த 5 லட்சம் செடிகள் நடவு செய்யப்பட்டதோடு, 25 ஆயிரம் பூந்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வந்தது...

ஆஸ்பத்திரி
இதை ஆன்லைனில் பார்வையிட வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்... தமிழகத்தில் கூடுதலாக டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்கப்படுவார்கள்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications