ஊட்டி பஸ் ஸ்டாண்டில் திருமணமான பெண்.. காரில் வந்த வியாபாரி.. நீலகிரியில் அக்கப்போரு.. தூக்கிய போலீஸ்
ஊட்டி: பெரும்பாலும் குற்ற சம்பவங்கள் நடக்காத மாவட்டமாக கருதப்படுவது நீலகிரியாகும்.. ஆனால், சமீபகாலமாகவே பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவது, மாவட்ட மக்களை கதிகலங்க செய்து வருகிறது.. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கையை அதிலும் உடனடியாக எடுத்து வருகிறது.. அந்தவகையில், தற்போதும் ஒரு இளைஞர் ஊட்டியில் சிக்கியிருக்கிறார்.
சமீபத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்தது.. ஹோப் பார்க் பகுதியை சேர்ந்த 50 வயது செந்தில்குமார், 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றி உள்ளார்.

அறிவியல் ஆசிரியர் அட்டகாசம்
கடந்த ஜூன் மாதம் ஊட்டி அருகிலுள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவர் அந்த பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அரசு பள்ளிக்கு, பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றிருந்தனர்.. அப்போது உடலில் Good Touch, Bad Touch (நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்) குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் தரப்பட்டது. அப்போது பள்ளியிலிருந்த 6ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர், அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் சொன்னார்..
கோவை ஜெயிலில்
இதைக்கேட்டு அதிர்ந்து போன போலீசார் உடனடியாக இதுகுறித்து விசாரணையின் விசாரணையும் நடத்தினர்.. அப்போதுதான், அந்த பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கும், செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது...
உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் போலீசார் தகவல் தந்தனர்.. இறுதியில் செந்தில்குமாரை போக்சோவில் வழக்கு பதிவு செய்த போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.. இப்போது செந்தில்குமார் கோவை ஜெயிலில் உள்ளார்.
திருமணமான பெண் மீது ஆசை
இந்நிலையில், மீண்டும் ஒரு பாலியல் கொடுமை நீலகிரியில் நடந்துள்ளது.. ஊட்டி அருகே உள்ள தட்டனேரியை சேர்ந்தவர் நவநீதன்.. 39 வயதாகிறது.. இவர் ஒரு வியாபாரி.
இவர் திருமணமான ஒரு பெண்ணின் மீது விருப்பம் கொண்டுள்ளார்.. அந்த பெண், இவரது பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்.. 30 வயதான அந்த பெண்ணுக்கு கணவர், குழந்தைகள் உள்ளனர். ஊட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அந்த பெண் வேலை பார்த்து வருகிறார்.
தினமும் வேலைக்கு சென்று வருவதற்கு பஸ் வசதி கிடையாது.. அதனால், வேலை முடிந்து வீட்டுக்கு போக வேண்டுமானால், கல்லட்டி சாலையில் நடந்து ஊட்டி வந்து, அதற்கு பிறகுதான் செல்ல வேண்டும்.. இந்த கல்லட்டி சாலையில் நடக்கும்போதுதான், அந்த பெண்ணை பின்தொடர ஆரம்பித்துள்ளார் நவநீதன்..
ஊட்டி கம்பெனிக்கே சென்று டார்ச்சர்
கடந்த சில நாட்களுக்கு முன்புகூட, வேலை செய்யும் ஊட்டி கம்பெனிக்கே நேரடியாக சென்று செல்போன் நம்பர் வேண்டும் என்று கேட்டு, பெண்ணை தொல்லை செய்தாராம்.. இதைப்பார்த்துவிட்டு, அங்கிருந்தவர்கள் நவநீதனை திட்டி உள்ளனர்.. கடுமையாக கண்டித்தும் உள்ளனர்.. அதற்கு பிறகு அப்பெண்ணின் ஊட்டி ஆபீசுக்கு செல்வதில்லையாம்.
இதனால் அந்த பெண் எங்கு சென்றாலும், பின்னாடியே சுற்றி வந்துள்ளார்.. வீட்டில் தன்னுடைய கணவரிடம் இதைப்பற்றி சொன்னால், வேலைக்கு செல்வதை நிறுத்திவிடுவோர் என்று பயந்து, கணவரிடமும் சொல்லாமல் தவிர்த்துள்ளார் அந்த பெண்.
பஸ் ஸ்டாண்டில் அக்கப்போரு
ஒருநாள் அந்த பெண், ஊட்டி பஸ்சிற்காக காத்திருந்தபோது காரில் வந்துள்ளார் நவநீதன்.. பஸ் ஸ்டாண்டில் காரை நிறுத்திவிட்டு, லிப்ட் தருவதாக சொல்லி, அந்த பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் அப்பெண் வர மறுத்திருக்கிறார்..
இதனால் ஆத்திரமடைந்த நவநீதன் பெண்ணை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து, லிப்ட் தந்தால் காரில் ஏறி வேண்டியதுதானே? என்று சொல்லி காருக்குள் தள்ள முயற்சித்துள்ளார்..
இதனை சிறிதும் எதிர்பாராத அந்த பெண் அலறி சத்தம் போடவும், அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்துள்ளனர்.. அவர்களை பார்த்ததுமே நவநீதன் அங்கிருந்து ஓடிவிட்டார்.. இதற்கு மேல் பொறுமையிழந்த அந்த பெண், ஊட்டி புதுமந்து போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நவநீதனை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications