ஊட்டியில் கலெக்டரையே ஆடிப்போக வைத்த சம்பவம்.. வாட்ஸ் அப் மெசேஜ்.. லட்சுமி பவ்யா ஐஏஎஸ் விளக்கம்
ஊட்டி: நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா என்பவர் கடந்த ஓராண்டாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் கிரைம் கும்பலைச் சேர்ந்த மர்ம நபர்கள், போலி வாட்ஸ்-அப் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் கலெக்டருடன் தொடர்பில் உள்ளவர்கள், அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்றைக்கு சைபர் குற்றவாளிகள் பலர், நூதன முறையில் பணம் பறிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளார். பிரபல நபர்களின் பெயரில் போலியான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டா அக்கவுண்டைஉருவாக்குகிறார்கள். அவர்களின் முகப்பு படம் போல் முகப்பு படத்தை உருவாக்குகிறார்கள். அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் அப்படியே இருக்கும்.இதைபார்த்தால் ஒரிஜினல் போல் இருக்கும்.

நீலகிரி கலெக்டர்
அந்த கணக்கில் இருந்து அவர்களுடன் நட்பில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்புவார்கள். அவர்களும் இவ்வளவு பெரிய ஆள் நம்மிடம் பணம் கேட்கிறாரே என்று ஏமாந்து பணத்தை அளித்துவிடுகிறார்கள். இது பலருக்கும் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்ட கலெக்டர் பெயரிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்து என்பதை பார்ப்போம்.
லட்சுமி பவ்யா ஐஏஎஸ்
நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா ஐஏஎஸ் இருக்கிறார். கடந்த ஓராண்டாக நீலகிரியில் கலெக்டராக இருந்து வருகிறார். இந்தநிலையில் கலெக்டர் லட்சுமி பவ்யாவின் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் கிரைம் கும்பல் போலி வாட்ஸ்-அப் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் கலெக்டருடன் நட்பில் உள்ளவர்கள், அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மெசேஜில் தனது வங்கிக்கணக்கில் பிரச்சினை இருப்பதால் உடனடியாக பணம் அனுப்ப முடியவில்லை.
பணம் கேட்டு மெசேஜ்
ஆகவே நீங்கள் பணம் அனுப்பி உதவி செய்தால், உங்களுக்கு பின்னர் பணம் அனுப்புகிறேன் என்று கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுவது போல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சிலர் இதுகுறித்து கலெக்டரிடமே நேரில் சென்று கேட்டுள்ளனர். அப்போதுதான் சைபர் கிரைம் கும்பலின் கைவரிசை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட எஸ்பி நிஷா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரவீனா தேவி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.
வியட்நாமில் இருந்து உருவாக்கம்
முதற்கட்டமாக இந்த போலி வாட்ஸ்-அப் கணக்கு வியட்நாமில் தொடங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. இதுபோன்று ஏற்கனவே பல மாவட்ட கலெக்டர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி வாட்ஸ்-அப் கணக்குகளை உருவாக்கி பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது. அந்த வரிசையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா புகைப்படத்துடன் போலி வாட்ஸ்-அப் கணக்கு உருவாக்கி பண மோசடி செய்ய முயற்சி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனது பெயரில் பணம் கேட்டால் யாரும் அனுப்ப வேண்டாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தனது வாட்ஸ்-அப்பில் பதிவிட்டுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications