டீ குடிக்கும்போதே சுருண்டு விழுந்து இன்ஸ்பெக்டர் பலி! ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில் நேர்ந்த சோகம்!
நீலகிரி: பணி ஓய்வு பெறுவதற்கு 1 நாள் முன்பாக, காவல்துறை இன்ஸ்பெக்டர் டீ குடித்துக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே கருமண் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (60). இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும், சூரியகுமார் என்ற மகனும் உள்ளனர்.

தனபால் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் தனபால் டீ குடித்துள்ளார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து பதறிப்போன அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தனபாலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, தனபாலின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாரடைப்பால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் தனபால், இன்றுடன் (மே 31) பணி ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications