உடம்பில் துணி கூட இல்லை.. தொப்புள் கொடி ஈரமும் காயல.. ஊட்டி குளிரில் கோயில் வாசலில் சிசு.. !
ஊட்டி: உடம்பில் துணி கூட போர்த்தவில்லை.. ஊட்டி குளிரில் பச்சிளம் குழந்தையை யாரோ கோயில் வாசல் முன்பு போட்டுவிட்டு போயுள்ளனர்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஊட்டி கொல்லிமலை கிராமத்தில் உள்ளது காந்திபுதூர்... இங்குள்ள மதுரைவீரன் கோயில் முன்பு திடீரென ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோதுதான், பிறந்த சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்தது... அந்த குழந்தைக்கு துணி கூட சுற்றவில்லை.. வெறும் உடம்பில் சுற்றி கோயில் வாசலில் யாரோ போட்டுவிட்டு சென்றுள்ளனர்.. அதனால் பொதுமக்கள் இது குறித்து கொலக்கொம்பை போலீசுக்கு தகவல் சொல்லவும், போலீசாரும் விரைந்து வந்தனர்.
உடனடியாக குழந்தைக்கு கம்பளி ஒன்று போர்த்தினர்.. சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... அங்கு குழந்தையை டாக்டர்கள் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.. குழந்தை இப்போது நன்றாக இருக்கிறது. குழந்தை பிறந்து 10 நாள் ஆகியிருக்கும் என்கிறார்கள்..
இக்குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை.. வளர்க்க முடியாமல் இப்படி போட்டுவிட்டு போனார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரணை நடந்து வருகிறது.. இந்த தகவல் அறிந்து குழந்தை பாதுகாப்பு நல அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
அதேபோல யாருக்கெல்லாம் சமீபத்தில் பிரசவம் ஆனது என்பது குறித்தும் கேட்டறிந்து வருகின்றனர்... ஊட்டி குளிரில் கோயில் வாசலில் ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications