Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டியில் ஒரே இளைஞரை காதலித்து குழந்தை பெற்ற மாணவிகள்.. 2 கே கிட்ஸ் அறிய வேண்டிய பெரிய பாடம்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: இன்றைக்கு 2 கே கிட்ஸ் இளைஞர்கள், இளம் பெண்கள், காதல் குறித்தும், போக்சோ வழக்குகள் குறித்தும் போதிய புரிதல்கள் இல்லாமல் இருக்கிறார்கள். 22 வயது கூட ஆகாத நிலையில், 15 வயது பெண்ணை காதலித்துள்ளார் ஊட்டி இளைஞர், மறுபக்கம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அதேபோல் 18 வயது ண்ணை காதலிக்கிறார். இதில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களும் கர்ப்பம் ஆகிவிடுகிறார்கள். குழந்தையும் பிறந்துள்ளது. இப்போது 15 வயது பெண்ணை காதலித்து கர்ப்பம் ஆக்கியதற்காக போக்சோவில் சிறையில் இருக்கிறார் இளைஞர். இதனால் கை குழந்தைகளுடன் இரண்டு பெண்களும் பரிதவித்து போயிருக்கிறார்கள்.

காதல் குறித்தும் போக்சோ குறித்தும் கண்டிப்பாக விழிப்புணர்வு பள்ளிகளிலேயே ஏற்படுத்த வேண்டும். இன்றைக்கு 18 வயது கூட ஆகாத சிறுமிகள் காதல் வலையில் சிக்கி, குழந்தையுடன் தவிக்கிறார்கள். மறுபக்கம் காதல் வேகத்தில் ஒன்று சேர்ந்து சுற்றிய இளைஞன், 20 வயதிலேயே சிறைக்கு செல்கிறான். 18 வயது நிறைவு பெறாத பெண்ணை காதலிக்கவே கூடாது என்ற புரிதல் இங்கு பலருக்கு இல்லை..

School and college students who gave birth at same time in Ooty 2K Kids is a big lesson to learn

அதேபோல் 18 வயது நிறைவு பெறாமல் காதலிக்கக்கூடாது என்ற எண்ணமும் பல பெண் சிறார்களுக்கு இருப்பது இல்லை.. பருவ வயதில் படிப்பை தேர்வு செய்வதற்கு பதில், காதலனை தேர்வு செய்கிறார்கள். பக்குவமற்ற அந்த வயதில் தேர்வு செய்வது தான், அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்குகிறது. மாணவர்களுக்குமே அந்த வயதில் காதலித்து எல்லை மீறுவதால் போக்சோவில் உள்ள போகிறார். ஊட்டியிலும் அப்படித்தான்.. ஆனால் சற்று வித்தியாசமானது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 22 வயதாகும் பிரவீன் டிப்ளமோ முடித்துள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கும், ஊட்டியில் தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே செல்ல சண்டைகள் ஏற்பட்டுள்ளது. அப்போது 2 பேரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர்.

இந்த சமயத்தில் பிரவீனுக்கு, ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். அவரையும் காதலிப்பதாக கூறி சுற்றி வந்துள்ளார். இதற்கிடையே பள்ளி மாணவியுடன் சமாதானமாகி, அவருடன் மீண்டும் பிரவீன் பழகி வந்தார். அப்போது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி எல்லை மீறியதாக கூறப்படுகிறது. பின்னர் அவருடன் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.

மறுபுறம் மீண்டும் கல்லூரி மாணவியுடன் பிரவீன் நெருங்கி பழகி வந்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கல்லூரி மாணவி கர்ப்பமானது தெரியவந்ததால், அவரது வீட்டிற்கு தெரியாமல் பிரவீன் மாணவியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் கல்லூரி மாணவி 18 வயது நிறைவடைந்தவராக இருந்ததால் பிரச்சினை ஏற்படவில்லை. மேலும் அவருக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்தநிலையில் பள்ளி மாணவிக்கு கடந்த 3-ந் தேதி திடீரென வயிறு வலி ஏற்பட்டிக்கிறது. அவரை தாய் ஊட்டி அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதனால் மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் அதிலிருந்து மீள்வதற்குள், சிறிது நேரத்தில் பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிரவீன் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, பிரவீனை போலீசார் கைது செய்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் கை குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றனர். காதல் என்ற பெயரில் சுற்றும் மாணவ மாணவிகளுக்கு இந்த சம்பவம் பெரிய பாடமாக இருக்கிறது. தயவு செய்து காதல் என்ற பெயரில் எல்லை மீறக்கூடாது. 18 வயது நிறைவு பெறாமல் காதலிப்பதும் சிக்கலில் போய் முடியும் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+